வியாழன், 14 பிப்ரவரி, 2019

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முலாயம் சிங் பேச்சு

தினமலர் : புதுடில்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என லோக்சபாவில் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசினார்.
லோக்சபாவில் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் நன்றியுரை நிகழ்த்தினர்.அப்போது, சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசியதாவது: மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அவரை வாழ்த்துகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைத்து கட்சிகளையும், மோடி ஒருங்கிணைத்து சென்றுள்ளார். பல நல்ல பணிகளை விரைந்து செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது லோக்சபாவில் இருந்த பிரதமர் மோடி, புன்னகைத்தபடி, முலாயமுக்கு நன்றி தெரிவித்தார். அவரது மகனும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ், உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக மாயாவதியுடன் கைகோர்த்து உள்ளார்.

லக்னோ விமான நிலையத்தில் தன்னை மாநிலத்தில் ஆட்சி செய்யும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியதாக புகார் கூறியுள்ள அவர், டில்லியில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார எண்ணத்துக்கு மதிப்பு: முலாயம் பேச்சு குறித்து காங்., தலைவர் ராகுல் கூறுகையில், 'எனது மதிப்பிற்குரிய தலைவர் முலாயம் சிங்கிற்கு, தேசிய அளவில் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

ஆனாலும், அவரது எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்' என்றார்.< நடக்குமா?
 பார்லி., வளாகத்தில் தேசியவாத காங்., கட்சியின் பெண் எம்.பி., சுப்ரியா சுலே கூறுகையில், 'கடந்த 2014 பார்லி., நிறைவு நாளின் போதும், மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வேண்டும் என அவருக்கு முலாயம் வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை' என்றார்.ர்.<

கருத்துகள் இல்லை: