

பாரதிராஜாவின் மகன் மனோஜ் 1999ஆம் ஆண்டு வெளியான தாஜ்மகால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் பல படங்கள் நடித்திருந்தாலும் பெரும் வரவேற்பு அவருக்குக் கிடக்கவில்லை. தற்போது ரெடி டு சூட் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் தனது பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். கார் வேகமாக சென்றதால் அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார், மறித்து உள்ளே இருந்த மனோஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது போலீஸாருக்கு தெரிந்துள்ளது. இதனை அடுத்து சுவாச சோதனை உபகரணம் மூலமான ஆய்வில் மனோஜ் போதையில் இருப்பது உறுதியானது.
இதனை அடுத்து அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பி.எம்.டபிள்யூ., காரைப் பறிமுதல் செய்துள்ள போலீசார் அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக