வியாழன், 5 ஜூலை, 2018

அழகிரி : ஸ்டாலின் செயல்படாத தலைவர் ....திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்..

tamilthehindu : மதுரை : முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரையை அடுத்த
பாலமேட்டில் இன்று அவரது ஆதரவாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காகவே உள்ளனர் . திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்.
செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார். செயல்படும் வீரர்கள் பாலமேட்டில் உள்ளனர் என்று மு.க.அழகிரி கூறினார்.< ஸ்டாலின் செயல்படாத தலைவர். உண்மையான திமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர் என்று மு.க.அழகிரி பேசினார்.
பாலமேடு அருகே தன் ஆதரவாளர் மதுரை வீரன் இல்லத் திருமண விழாவில் இன்று கலந்துகொண்ட அழகிரி மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

பின்னர் அவர் கூறுகையில், ''நான் மதுரையிலிருந்து திருமண விழாவிற்கு வருகின்றேனா அல்லது கட்சி நிகழ்ச்சிக்கு வருகின்றேனா என்று தெரியாமல் எனக்கு வரவேற்பு, பேனர்கள், மாலை மரியாதை செய்யும்போது பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது. திமுகவில் இப்போது உள்ளவர்கள் பதவிக்காகவே உள்ளனர். அவர்கள் உண்மையாகவே கட்சிக்கு உழைக்காதவர்கள். செயல்படாத தலைவர் செயல் தலைவராக சென்னையில் உள்ளார். செயல்படுகிற வீரர்கள் இங்குதான் உள்ளனர்'' என்று அழகிரி பேசினார்.
முன்னதாக, தென் மாவட்ட திமுகவில் மு.க.அழகிரி மத்திய அமைச்சராகவும், தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தபோது, இடைத்தேர்தலுக்கு தனி ஃபார்முலாவையே உருவாக்கினார். திமுக 2016-ம் ஆண்டு தேர்தலில் தோற்ற பிறகு அழகிரிக்கு கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்தது. அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சேர்ந்தனர். அழகிரியும் அரசியலில் ஆர்வமில்லாமல் ஒதுங்கியே இருக்கிறார். அதனால் அவரது ஆதரவாளர்களும் அமைதியாகி விட்டனர். திமுகவினர் அழகிரியைக் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் திருமண விழாவில் கலந்துகொண்ட மு.க.அழகிரி, ‘ஸ்டாலின் செயல்படாத தலைவர். உண்மையான திமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்’ என்று கூறியிருப்பது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: