புதன், 4 ஜூலை, 2018

மானசரோவரிலிருந்து முன்னாள் காங். எம்.எல்.ஏ. காயத்ரி தேவி.. நிலைமை மிகவும் மோசம்...

உணவின்றி... கோரிக்கை காத்மாண்டு: கனமழை மற்றும் கடுங்குளிரால் மானசரோவரில் மிகவும் மோசமாக தவித்து வருகிறோம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி தெரிவித்தார்.
கைலாஷ் மற்றும் மானசரோவர் யாத்திரைக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றனர். வரும் வழியில் நேபாளத்தில் இவர்கள் சென்றுவிட்டு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களுள் மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி உள்பட பல்வேறு தமிழர்கள் தவித்து வருகின்றனர். வந்துவிட்டால்… இதுகுறித்து காயத்ரிதேவி கூறுகையில் நாங்கள் மருத்துவ உதவி, தங்கும் இடமில்லாமல் தவித்து வருகிறோம். இந்நிலையில் மானசரோவர் மலையிலிருந்து மேலும் 400 பேர் நாங்கள் தங்கியுள்ள இடத்துக்கு வரவிருக்கிறார்கள்.

அவ்வாறு வந்துவிட்டால் இன்னும் கடினமாக இருக்கும். உணவின்றி… சிலிகாட் என்ற பகுதியில் 750-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அவர்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
அவர்கள் தங்க இடமின்றியும், உணவின்றியும் தவித்து வருகின்றனர். நாங்கள் இருக்கும் இடத்தில் 546 பேர் உள்ளனர். விமானம் மூலம் மீட்பு நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் 3 உடல்கள் இருந்தன. அவர்கள் வடமாநிலத்தவர், கர்நாடக மாநிலத்தவர் மற்றும் கேரள மாநிலத்தவர் ஆவர். தற்போது அந்த 3 உடல்களும் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கோரிக்கை கீழே உள்ள சிலிகாட்டில் இன்னும் 4 உடல்கள் இருப்பதாக கூறுகின்றனர். நேபாளில் உள்ள வானிலை இன்னும் சாதாரண நிலைக்கு வருவது போல் தெரியவில்லை. எனவே நேபாளத்திலிருந்து விமானம் வரும் வரை காத்திருக்காமல் வெளியுறவு துறை அமைச்சகம் தலையிட்டு எங்களை உடனடியாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என்றார் காயத்ரி தேவி. ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: