புதன், 28 பிப்ரவரி, 2018

2ஜி யின் பின்னணி ... வடநாட்டில் "சாலே மதராசி" ... தென்னிந்தியாவில் "சேட்ஜி "

தமிழ்நாட்டின் திமுக என்கிற “சுண்டைக்காய் மாநில கட்சி” 1996 முதல் 2011 வரை 15 ஆண்டுகள்  தொடர்ந்து மத்திய அரசை நிர்ணயிக்கும்/ கட்டுப்படுத்தும் சக்தியாக செயற்பட்டதை Delhi Establishment இன் அடி முதல் நுனிவரை ஏற்கவோ சகிக்கவோ முடியவே இல்லை என்பது அந்த காலகட்டத்தில் டில்லியில் இருந்த தமிழர்களுக்கு நன்கு தெரியும். அந்த வன்மம் தான் 2ஜி விவகாரத்தில் எரிமலையாய் வெடித்தது.
LR Jaggu : டில்லியில் தமிழர் உள்ளிட்ட தென்னிந்தியர்களின் பொது அடையாளம் “சாலே மதராஸி”. சென்னையில் வடநாட்டவரின் பொது அடையாளம் “சேட்ஜி”.
“சாலே மதறாஸி” என்கிற ஒற்றைச்சொல்லில் டெல்லியில் வெளிப்படும் வடநாட்டவரின் ஆணவம் வரலாற்றுரீதியானது. இந்திய அரசியலுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த (வட)இந்திய சமூகத்துக்கும் தமிழ்சமூகத்துக்குமான எல்லா வகை முரண்களுக்கும் அதுவே அடிப்படை.
வெறும் அரசியல் மட்டுமல்ல, ஊடகம், சினிமா, வர்த்தகம், அரசுப்பணி என எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் டில்லி உள்ளிட்ட மும்பைக்கு மேலாக இருக்கும் இந்திய பூபாகத்தில் இருந்து செயற்பட நேர்ந்த தென்னிந்தியர்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு இந்த அவமானம் ஒரே ஒருமுறையேனும் நேர்ந்தே இருக்கும்.

தமிழ்நாட்டு பிராம்மணர்கள் என்னதான் ஹிந்தியை சரளமாய் பேசி அவர்களோடு ஒண்ணுமண்ணா கலக்க முயன்றாலும் அவர்களும் வடநாட்டவரைப்பொறுத்தவரை “சாலே மதராஸி” தான். நடிகர் மாதவனுக்கு நேர்ந்த அனுபமே அதற்கொரு நல்ல சாட்சி.
தமிழ்நாட்டவர் பயந்தாங்கொள்ளிகள் நல்ல அடிமைகள் என்பதே அவர்களின் பொதுப்புரிதல். அதனால் தான் தம் அலுவலகங்களில் வேலைக்கும் வீடுகளை வாடகைக்கு விடுவதற்கும் அவர்கள் “சாலே மதறாஸிகளை” பெரிதும் விரும்புவார்கள். அதிர்ந்து பேசாத அடிமைகள் வேலையை விட்டு நீக்கினாலும் வீட்டை காலி செய்யச்சொன்னாலும் எதிர்த்து சண்டை போடாமல் போய்விடுவார்கள் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
தமிழர் மீதான அந்த பொதுவான எகத்தாளம் தான் 2ஜி விவகாரத்தில் ஒட்டுமொத்த டெல்லியும் அதன் சமூகமும், நீதித்துறையும், ஊடகங்களும், நிர்வாகமும், அனைத்து அரசு இயந்திரங்களும், நாடாளுமன்றமும் கட்சிகடந்து, ஜாதிகடந்து, வர்க்கம் கடந்து ஒன்றுகூடி அவ்வளவு மூர்க்கமாய் எதிர்க்க அமைந்த பொதுவான உளவியல் அடிப்படை.
தமிழ்நாட்டின் திமுக என்கிற “சுண்டைக்காய் மாநில கட்சி” 1996 முதல் 2011 வரை 15 ஆண்டுகள் (இடையில் ஓராண்டு அதிமுக அலம்பல் ஆட்சிக்கவிழ்ப்பு வேறு) தொடர்ந்து மத்திய அரசை நிர்ணயிக்கும்/கட்டுப்படுத்தும் சக்தியாக செயற்பட்டதை Delhi Establishmentஇன் அடி முதல் நுனிவரை ஏற்கவோ சகிக்கவோ முடியவே இல்லை என்பது அந்த காலகட்டத்தில் டில்லியில் இருந்த தமிழர்களுக்கு நன்கு தெரியும்.
அந்த வன்மம் தான் 2ஜி விவகாரத்தில் எரிமலையாய் வெடித்தது. திமுகவும் தன் தவறுகளுக்கு அதிகபட்ச தண்டனையை அனுபவித்தது.
அந்த பின்னணியில் வி பி சிங், ஓ பி சைனி போன்றவர்கள் அபூர்வ பிறவிகள். எல்லா இந்தியர்களும் சட்டத்தின் முன், அதன் ஆட்சியின் கீழ் சமமானவர்கள் என்று நம்பிய, நடத்திய உண்மையான “இந்தியர்கள்”.

கருத்துகள் இல்லை: