vinavu : தென்னாப்பிரிக்க நாட்டில் நடந்த ஊழலில் பாங்க் ஆப் ஃபரோடா வங்கிக்கும் தொடர்பு இருப்பது “தி இந்து” பத்திரிகை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. குப்தா சகோதரர்கள்p;உடன் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் சுமாவின் மகன் டுடூசேன்

உதாரணமாக சில பரிவர்த்தனைகளை பார்க்கலாம்.
1. குப்தா சகோதரர்கள் மற்றும் சுமாவின் மகன் இணைந்து டெகிட்டா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். வழக்கமாக ஒரு டன் நிலக்கரியை $19.40 (ரூ 1259)டாலருக்கு சந்தையில் வாங்கிவந்த தென்னாப்பிரிக்க அரசு மின்னுற்பத்தி நிறுவனமான எஸ்காம், டெகிட்டாவின் வருகைக்கு பிறகு அதைவிட இரண்டு மடங்கு விலைக்கு கொள்முதல் செய்தது. இது எஸ்காம் நிறுவனம் செய்தி கொண்ட மிகப்பெரிய ஒப்பந்தம்.
2. தென்னாப்பிரிக்க அரசு மின்னுற்பத்தி நிறுவனத்தை ஏமாற்றி தரம் குறைந்த நிலக்கரி சப்ளை செய்ததாக கிளென்கோர் (glencore)சுரங்க நிறுவனத்திற்கு 170 மில்லியன் டாலர் (1143 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட அபராதம் காரணமாக அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வராத நிலையில் 2015 டிசம்பரில் குப்தா சகோதரர்கள் அந்நிறுவனத்தை வாங்க முன்வருகிறார்கள். குப்தா சகோதர்களுக்கு கைமாறும் ஒப்பந்தம் முடிவாகும் நிலையில் தென்னாப்பிரிக்க அரசு நிறுவனம் மேற்கண்ட அபராதத்தை தள்ளுபடி செய்கிறது.
3. மேற்கண்ட ஒப்பந்தத்தின்படி கிளென்கோர் நிறுவனத்தை வாங்குவதற்கு தங்களிடம் பணம் இல்லை என கைவிரிக்கிறார்கள் குப்தா சகோதரர்கள். அப்போது அரசுத்துறை நிறுவனமான எஸ்காம் குப்தா சகோதரர்கள் இனிமேல் செய்யப்போகும் வேலைகளுக்காக தான் முன் தொகை கொடுக்க தயார் எனக்கூறி $52 மில்லியன் டாலர் வட்டியில்லாமல் தருகிறது.
4. ஜூன் 2017-ல் அரசுத்துறை நிறுவனத்திடமிருந்து குப்தாவின் டிரில்லியன் (trillian) நிறுவனத்திற்கு நிதி மற்றும் நிர்வாக வேலைகளுக்கு என்ற பெயரில் $36.3 மில்லியன் டாலர் பணம் கைமாற்றப்பட்டுள்ளது. ஆனால் அத்தேதியில் டிரில்லியன் நிறுவனம் அப்படியான வேலைகள் எதுவும் செய்யவில்லை என்பதுடன் அந்நிறுவனத்தில் மொத்தமே சில ஊழியர்கள் தான் வேலை செய்து வந்துள்ளார்கள். அதாவது டிரில்லியன் ஒரு போலி உப்புமா கம்பெனி.
5. இது போல பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து குப்தா நிறுவனங்களுக்கு எளிதில் கண்டறியமுடியாதவாறு வலைபின்னல் வங்கி கணக்குகள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இக்கொள்ளை கசிய தொடங்கியதும் தனது நிறுவனத்தை சுவிச்சர்லாந்தின் சார்லஸ் கிங் எஸ்.ஏ என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக அறிவித்தார்கள் குப்தா சகோதர்கள். மேற்கண்ட கைமாற்றல் குப்தாவின் சுவிச்சர்லாந்து வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதால் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டாலும் பணத்தை பறிமுதல் செய்ய முடியாது. மின்சார கட்டணத்தை அதிகரித்து இழப்பை சரிகட்ட முனைந்துள்ளது தென்னாப்பிரிக்க அரசு.
கடந்த 2016 ஆண்டில் பிற வங்கிகள் இப்பரிவர்த்தனைகளை கண்டறிந்து குப்தா நிறுவனங்களுடன் தங்களது தொடர்பை துண்டித்துள்ளன. அதே சமயத்தில் பாங்க் ஆப் ஃ பரோடா தனது ஊழியர்களின் அலுவலக குறிப்புகளை மாற்றியமைத்து மேற்கண்ட பரிவர்தனைகள் நடந்தேற துணை புரிந்துள்ளது.
மேற்கண்ட கொள்ளை அப்படியே இந்தியாவிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதானியின் நிலக்கரியை சந்தைவிலையை விட அதிக விலைகொடுத்து வாங்கிகொண்டிருப்பதை வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். தமிழக மின்சார கட்டண உயர்வுக்கு இதே முறையிலான கொள்ளை தான் காரணம்.
இந்தியா தொடங்கி தென்னாப்பிரிக்கா வரை முதலாளித்து கொள்ளையில் எந்த மாற்றமும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக