சனி, 3 மார்ச், 2018

மேகாலயா சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் தனிப்பெரும் கட்சி .

மேகாலயா சட்டசபை தேர்தல் - இறுதி முடிவுகள் நிலவரம்மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவை சந்தித்த 59 தொகுதிகளுக்குமான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.  ஷில்லாங்: 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா சட்டசபையின் 59 இடங்களுக்கு கடந்த 27-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 
21 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பா.ஜ.க. வேட்பாளர்கள் இரு இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஒரு இடத்திலும் வென்றுள்ளனர்.
 மலையக மக்கள் குடியரசு கட்சி வேட்பாளர்கள் இரு இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர்கள் 19 இடங்களிலும் வெற்றி அடைந்துள்ளனர்.
; ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் 6 இடங்களிலும், குன் ஹைம்மிவ்டிரெப் தேசிய விழிப்புணர்வு இயக்கம் வேட்பாளர் ஒரு இடத்திலும், மக்கள் குடியரசு முன்னணி வேட்பாளர்கள் 4 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். மேகாலயா சட்டசபைக்கு உட்பட்ட வில்லியம் நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனாதன் சங்மா கடந்த மாதம் 18-ம் தேதி வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அதனால் அந்த ஒரு தொகுதியை தவிர்த்து மீதியுள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: