சனி, 23 செப்டம்பர், 2017

ஓ.பி.எஸ்.-க்கு முதல்வர் இலாகாவை மாற்ற ஜெயலலிதா கையெழுத்து போட்டது எப்படி: மு.க.ஸ்டாலின் கேள்வி

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ள நிலையில் மு.க. ஸ்டாலின் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
 ஓ.பி.எஸ்.-க்கு முதல்வர் இலாகாவை மாற்ற ஜெயலலிதா கையெழுத்து போட்டது எப்படி: மு.க.ஸ்டாலின் கேள்வி மதுரை பழங்காநத்தத்தில் நேற்ற நடந்த அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினா்ர. அப்போது, ‘‘புரட்சித்தலைவி என்ற அந்த தெய்வத்தை நோய்க்கு மருந்து கொடுக்காமல் கொண்டு போய் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அய்யா உங்களிடம் எல்லாம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள் பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று இட்லி சாப்பிட்டார்கள், சட்னி சாப்பிட்டார்கள் என்று ஏதோ ஒரு பொய்யை சொன்னோம். ஆனால் உண்மையிலேயே அதை யாருமே பார்க்கவில்லை. இதுதான் உண்மை. அவர் பார்த்தார். இவர் பார்த்தார் என்று செய்தி சொல்வதெல்லாம் பொய். ஏன் என்று கேளுங்கள்.


அம்மா அப்பாவுக்குள் வீட்டில் சண்டை வரும். அக்கா-தங்கைகளுக்குள் சில நேரம் வீட்டில் சண்டை வரும். பல பிரச்சனைகள் வரும். பக்கத்து வீட்டுக்கு தெரியக் கூடாது என்பதற்காக ரகசியமாக பேசிக் கொள்வோம். அந்த மாதிரி இது நம்முடைய கட்சியின் ரகசியம். வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்றைக்கு பொய்களை சொன்னோம்.

இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உண்மை. அன்றைக்கு அப்படி பேசினீர்களே. இது வடிவேலு மாதிரி அது அந்த வாய், இது இந்த வாய் என்பது இல்லை. உண்மையை சொல்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால் இது இன்றைய நிலை. அது அன்றைக்கு இருந்த சூழ்நிலை. இதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா உடல் நிலை பற்றி பொய் சொன்னோம்’’ என்றார்.

திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் சமூக இணைய தளத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் யாரும் பார்க்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார். மூன்று தொகுதி இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ. பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் இலாகாவை கவனிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க ஜெயலலிதா கையெழுத்து போட்டதும், கைரேகை வைத்ததும் எப்படி?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை: