குண்டூர்: ஆந்திராவில், வெறி நாய்கள் கடித்து குதறியபோது காப்பாற்றாமல், பொதுமக்கள், மொபைல்போனில் வீடியோ எடுத்ததால், 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். குண்டூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில், கூலி தொழில் செய்யும் தம்பதியின், 4 வயது மகன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய்கள், திடீரென, சிறுவன் மீது பாய்ந்து, அவனை கடித்து குதறின.
கொடூர சம்பவம்
அவ்வழியே சென்ற பொதுமக்கள், சிறுவனை மீட்காமல், நாய்கள் கடித்து குதறும் கொடூர சம்பவத்தை, தங்கள் மொபைல்போனில் படம் எடுத்தனர். தகவல் அறிந்து ஓடி வந்த பெற்றோர், வெறி நாய்களிடமிருந்து, மகனை மீட்டு, மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். பல நாய்கள் கடித்ததில், உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டதால், சிறுவன் இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
குண்டூரை சேர்ந்த குழந்தைகள் நல அமைப்பினர் கூறியதாவது: பொதுமக்களின் செயல், வெட்கப்படும்படி உள்ளது. சிறுவனை காப்பாற்றாமல், அவன் நாய்களால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்துஉள்ளனர்.
நடவடிக்கை இல்லை
தங்கள் வீட்டருகே, ஏராளமான வெறி நாய்கள் சுற்றித் திரிவதாக, பலியான சிறுவனின் தாய், ஒரு வாரத்திற்கு முன்பே, நகராட்சியில் புகார் அளித்துள்ளார்.
நகராட்சி அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சிறுவன் அநியாயமாக உயிரிழந்துள்ளான். இவ்வாறு அவர்கள் கூறினர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வெறி நாய், தெரு நாய்களை கொல்லும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. 'நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்து, அவற்றை மீண்டும், அதே இடத்தில் விட்டுவிடுவோம். அதற்கு மேல், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்றனர். தினமலர

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக