minnambalam,com :தமிழகத்தில்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, தமிழகத்தின்
பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் பல்வேறு
அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து தெரிவித்தபோது,
இந்த ஆண்டு தடை நீங்கி நிச்சயம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று
தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், நாம்தமிழர் கட்சியின் சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று(17/12/2016) மாலை ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு அல்ல. அது தமிழரின் உயிரோடு உயிரான மரபு. தமிழரின் அடையாளமாக இருக்கும் அதனை ஏன் தடை செய்கிறார்கள் என்பது புரியாத ஒன்றாக இருக்கிறது.
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு பின்னால் அரசியல் உள்ளது. எனவேதான், அதனை கொண்டு வருவதற்கும் அனைத்து தரப்பினரும் யோசிக்கின்றனர். ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்று கருத்து கூறுகின்றனர். ஆனால் காளைகள் மீது நாம் வைத்துள்ள பற்று அவர்களுக்கு புரியாமல் இருக்கிறது.
கோயிலில் கடவுளை வணங்குவதற்கு முன்பாக நந்தி சிலையை நாம் வணங்குகிறோம். அதுபோல் வீட்டில் ஒரு உறுப்பினர் போலவும், குல தெய்வம் போலவும் மாட்டினை பாதுகாக்கின்றோம். ஆனால், அதனை பீட்டா அமைப்பினர் மாட்டினை கொடுமைப்படுத்துவதாக கூறி வருகின்றனர்.
கேரளாவில் யானைப் பந்தயம், ராஜஸ்தானில் ஒட்டகப்பந்தயம் போன்றவை நடக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் இந்த பீட்டா அமைப்பினர் தடை செய்யவில்லை. தமிழரின் பண்பாடாக விளங்கும் ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்கின்றனர். யானை, ஒட்டகம், குதிரை போன்றவற்றை சந்தைப்படுத்த முடியாது. ஆனால், மாட்டினை சந்தைப்படுத்த முடியும். இந்த முக்கியக் காரணத்திற்காகத்தான் பீட்டா அமைப்பினர் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்கின்றனர். என்ன காரணத்திற்காக அவர்கள் ஜல்லிக்கட்டை தடை செய்கிறார்களோ அந்த காரணத்திற்காகத்தான் நாங்கள் அதனை நடத்த வேண்டும் என்று போராடுகிறோம்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளியுங்கள், அல்லது தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தாருங்கள். யார் எதிர்த்தாலும் இந்த ஆண்டு தடையை மீறியாவது ஜல்லிக்கட்டு நடத்துவோம்.” என்று பேசினார்.
கீ வேர்ட்ஸ்: மதுரை ஜல்லிக்கட்டு அரசியல் கட்சிகள் சீமான் தடை ஆர்ப்பாட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக