ஞாயிறு, 2 அக்டோபர், 2016

சுவாதி பெண் என்பதற்காக தான் கொல்லப்பட்டார் என நினைத்தால் நீங்கள் முட்டாள்!

கிருபா முனுசாமி : ஸ்வாதி இடத்தில் யார் இருந்திருந்தாலும் அந்நபர்
இந்துத்துவ கொலைவெறிக்கு பலியாகியிருப்பார். ஸ்வாதியின் கொலையில் பெண்ணுரிமை பேசுபவர்கள் ராம்குமாரின் அடிப்படை உயிர் வாழும் மனித உரிமையே பறிக்கப்பட்டிருப்பதை புறந்தள்ளுவதில் வெளிப்படுகிறது அவர்கள் இறுகப் பற்றியிருக்கும் ஜாதியுணர்வு
ராம்குமாரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வெளியில் எடுத்து வரப்படும் பொழுது அவரது வக்கில் திரு. S P ராமராஜ் அவர்கள் அழுது கொண்டே வெளியில் வருகிறார். வெறும் வக்கிலாக ஒரு தொழிலாக மட்டுமே அவர் அந்த வழக்கைப் பார்க்கவில்லை என்பது கண் கூடாக தெரிகிறது.
அவரது மனநிலை எத்தகையதாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். ஒட்டு மொத்தமாய் உண்மையும் நியாயமும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறது. அதற்காக போராடி தோற்றுவிட்ட மனநிலை.
ராம்குமாரின் மரணம் எதிரிகளின் முகாம்களில் நடந்துள்ளது. இந்த ஒட்டு மொத்த கட்டமைப்பும் அதனைக் கட்டிக் காக்கும் மனிதர்களும் எதிரிகளாய் மிகப் பெரிய சாம்ராஜிய பலத்தோடு இருக்க, நடுவில் சிக்கிய சிறு ஜீவன் ராம்குமார். அவரை காக்க அந்த சாம்ராஜியத்தை எதிர்த்த தனி மனிதனாக S P ராமராஜ் அவர்கள் போராடியிருக்கிறார்.

ராம்குமாரின் உயிரை காக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார். இந்த கட்டமைப்பின் கொடூர முகத்தைத் தைரியமாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.
எதிரிகளின் நெருக்கடியில் வீழ்த்தப்பட்ட ராம்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் அதே வேலையில், வக்கில் SP ராம்ராஜ் அவர்களின் நெஞ்சுரத்தை போற்றுகின்றேன்.
'திரு. ராம்ராஜ் ஐயா அவர்களே,
இங்கு வாழும் வக்கற்ற மக்களுக்கு தங்களது சேவை இனி தான் இன்னமும் அதிகமாக தேவைப்படுகிறது, . நியாயத்திற்காகவும் உண்மைக்காவும் ஏங்கித் தவிப்போர் அனைவரும் உங்களைப் போன்றோரை தான் நம்பி இருக்கிறோம். இன்றைய உங்களது கண்ணீர், இன்றோடு முடியட்டும். சமூகநீதி காக்க நினைக்கும் மக்கள் இனி உங்களைப் போன்றோரோடு இணைந்து இந்த கொடூரமான கட்டமைப்பை எதிர்க்கவும் வீழ்த்தவும் வியூகம் அமைப்போம். போராடுவோம்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: