"மூச்சுத் திணறல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார் முதல்வர். தற்போது செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் தொற்றை சரிப்படுத்துவதற்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலின் சிகிச்சைகள் நோய்த் தொற்றின் பாதிப்பைக் குறைத்து வருகிறது. தொடர் மருந்துகளின் விளைவாக, நேற்று முதல்வரின் கை, கால்களில் இயக்கத்தில் பெரும் அசௌகரியம் ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்தத் தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டன" என விளக்கிய கார்டன் ஊழியர் ஒருவர், "அப்போலோ மருத்துவமனையிலேயே தேவையான சிகிச்சை வசதிகள் இருக்கிறது. 'இந்த வசதிகளே போதும். வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை' என ரிச்சர்ட் தெரிவித்தார். நுரையீரல் தொற்றுக்கான சிறப்பு சிகிச்சை முறைகளை வழங்கி வந்தார். அவருடைய மேற்பார்வையிலேயே அப்போலோ மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர்!’’ என்றார்.
இந்நிலையில், லண்டனில் நடைபெறும் முக்கியமான மருத்துவ மாநாட்டுக்கு வருமாறு ரிச்சர்ட் பெயலுக்கு அழைப்பு வந்தது. மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததால், மூன்று நாள் பயணமாக லண்டன் சென்றுவிட்டார். அவருடைய இடத்தில், முதல்வரை கவனித்துக் கொள்ள சிறப்பு மருத்துவர் ஒருவர் லண்டனில் இருந்து வந்திருக்கிறார். ரிச்சர்ட் போலவே, நுரையீரல் தொடர்பான சிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். அப்போலோ மருத்துவர் குழுவுக்குத் தேவைப்படும் அறிவுரைகளை லண்டனில் இருந்தபடியே வழங்கிக் கொண்டிருக்கிறார் ரிச்சர்ட். இவர்களின் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை காரணமாக முதல்வரின் உடல்நிலையில் விரைவில் முன்னேற்றம் இருக்கும் என்று நம்புகிறோம்!’’ என்றார் நம்பிக்கையோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக