
இதையடுத்து, அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. மீது அவரது வீட்டில் வேலைபார்த்த பானுமதி, ஜான்சி ஆகியோர் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். அதில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முன்ஜாமீன் வழங்கக் கோரி சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சசிகலா புஷ்பாவை 6 வாரத்துக்கு கைது செய்வதற்கு தடையும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில், சசிகலா புஷ்பா புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மகளிர் காவல் ஆய்வாளர் அன்னதாய், 300க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவைப் பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் பரவின. இதையடுத்து தன்னை தவறாகச் சித்தரிக்கும் படங்களை நீக்க வேண்டும் என சசிகலா புஷ்பா வழக்கு தொடுத்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சசிகலா புஷ்பாவை தவறாகச் சித்தரிக்கும் படங்களை நீக்கும்படி உத்தரவிட்டுள்ளது. சசிகலா புஷ்பா பற்றி தவறாக படம் வெளியிடுவோர்மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக