வியாழன், 6 அக்டோபர், 2016

தம்பிதுரையிடம் என்ன கொடுத்தார் பன்னீர்? - தொடரும் அப்பல்லோ மர்மங்கள்!

என்னமோ நடக்குது... அதை என்னன்னு ஏன் சொல்ல மாட்டேங்குறாங்க...’ என்ற புலம்பல்கள் அமைச்சர்கள் மத்தியிலேயே கேட்கத் தொடங்கியிருக்கிறது. ஜெயலலிதா உடல்நிலை சார்ந்த விஷயங்கள் சசிகலா குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கட்சி சார்ந்த விஷயங்களை தம்பிதுரையும், பன்னீர்செல்வமும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்”

‘‘பிரதமரைப் பார்த்து காவிரி விவகாரம் தொடர்பாக மனு கொடுக்கப்போயிருந்த தம்பிதுரை திரும்பி வந்துவிட்டார். இன்று காலையில் அவர்தான் அப்பல்லோவுக்கு முதல் நபராக அட்டனன்ஸ் போட்டார். அவர் காரைப் பின்தொடர்ந்து வந்தது அமைச்சர் தங்கமணியின் கார். 9.30 மணிக்கு தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் வந்தார்கள். அதன்பிறகு அமைச்சர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

நாம் தமிழர் கட்சி சீமான், கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன் உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் வந்தார்கள். இன்று யாரும் இரண்டாவது தளத்துக்குப் போகவில்லை. எல்லோருமே முதல் தளத்துடன் நிறுத்தப்பட்டர்கள். முதலில் சீமான் வந்தபோது அவரோடு நீண்டநேரம் அமைச்சர் விஜயபாஸ்கர்தான் பேசிக்கொண்டிருந்தார். சீமானும் விஜயபாஸ்கர் சொல்வதை தலையாட்டியபடியே கேட்டுக் கொண்டார். ‘அம்மா நல்லபடியா வந்தால் அதுவே போதும்!’ என்று சீமான் சொன்னது அந்த அறை முழுக்கவே கேட்டிருக்கிறது. மருத்துவமனையில் இருந்து வெளியேவந்த சீமான், ‘முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தார்கள். வதந்திகள் ஆயிரம் வரும். அதையெல்லாம் யாரும் நம்ப வேண்டாம்!’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவரைத் தொடர்ந்து, இயக்குநர் அமீர் அங்கே வந்தார். அவருக்கும் முதல்வரின் உடல்நிலை பற்றி விளக்கம் கொடுத்தது அமைச்சர் விஜயபாஸ்கர்தான். தா.பாண்டியனிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் சில விளக்கங்களைச் சொன்னார். அதன்பிறகு தம்பிதுரையும் அருகில் வந்து, ‘எல்லோரையும் முதல்வரைப் பார்க்க அனுப்பணும்னுதான் நாங்களும் நினைக்கிறோம். ஆனால் இன்பெக்‌ஷன் ஆகும் என்பதால்தான் மருத்துவர்கள் யாரும் உள்ளே போகக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. நீங்க தப்பா நினைக்காதீங்க...’ என்று பக்குவமாகச் சொல்லியிருக்கிறார். மருத்துவமனையில் இருந்து வெளியேவந்த தா.பாண்டியன், ‘முதல்வர் பேசும் நிலையில் இல்லை. நான் முதல்வரைப் பார்க்கவில்லை. முதல்வரைப் பார்த்தவர்களை நான் பார்த்தேன். அவர் நலமுடன் இருப்பதாகச் சொன்னார்கள். வதந்திகளை நம்பி யாரும் எந்த தப்பான முடிவுகளையும் எடுக்க வேண்டாம். அதிமுக தொண்டர்கள் அமைதியாக இருக்கவேண்டியது அவசியம்..’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
அதிகாரிகள், அமைச்சர்கள், விசிட்டர்ஸ் என எல்லோரும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் எல்லோரும் சொல்லும் ஒரே தகவல், முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதுதான். ஆனால் யாரும் முதல்வரைப் பார்க்கவில்லை என்பது மட்டும்தான் இதில் தொடர்ந்து பல சந்தேகங்களை எழுப்பியபடியே இருக்கிறது. இன்றுடன் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வரை ஒருவர்கூட சந்திக்க முடியவில்லை என்பதுதான் கட்சிக்காரர்களிடமும் சரி... தமிழக மக்களிடமும் சரி... பல்வேறு சந்தேகங்களை எழுப்பக் காரணமாகியிருக்கிறது. ஆனால் சசிகலா அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்ற வருத்தம் அமைச்சர்களிடமும் இருக்கிறது” என்பதுதான் அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது.
‘‘காலை அமைச்சர்கள் வந்தபோது ஓ.பன்னீர்செல்வமும் வந்துவிட்டார். தம்பிதுரையுடன் சற்றுநேரம் நின்று பேசிக்கொண்டிருந்தவர், 11 மணி வாக்கில் மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டார். அவர் கார் நேராகப் போன இடம், கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு. அங்கிருந்து எதையோ எடுத்துக்கொண்டு மீண்டும் 12 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். தம்பிதுரையிடம் ஒரு கவரில் எதையோ கொண்டுவந்து கொடுத்தாராம் பன்னீர்செல்வம். தம்பிதுரை அதை வாங்கிக்கொண்டு பன்னீரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். மறுபடியும் அடுத்த அரை மணி நேரத்தில் பன்னீர் மருத்துவமனையில் இருந்து கிளம்பி வீட்டுக்குப் போனார். 2 மணிக்கு மீண்டும் திரும்பி மருத்துவமனைக்கு வந்தார். தம்பிதுரை என்ன கேட்டார்... எதை எடுத்து வந்தார் பன்னீர்... என்பது யாருக்கும் தெரியவில்லை. நேற்று சசிகலா குடும்பத்தினருடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்திவிட்டுவந்ததில் இருந்தே பன்னீர்செல்வம் சோக செல்வமாகவே இருப்பதாகச் சொல்கிறார்கள். சசிகலா குடும்பம் பன்னீர்செல்வத்துடன் நடத்திய சீக்ரெட் மீட்டிங்குக்கும், இன்று பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து ஏதோ டாகுமெண்ட்களை கொண்டுவந்து தம்பிதுரையிடம் கொடுத்ததற்கும் எதுவும் சம்பந்தம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ‘என்னமோ நடக்குது... அதை என்னன்னு ஏன் சொல்ல மாட்டேங்குறாங்க...’ என்ற புலம்பல்கள் அமைச்சர்கள் மத்தியிலேயே கேட்கத் தொடங்கியிருக்கிறது. ஜெயலலிதா உடல்நிலை சார்ந்த விஷயங்கள் சசிகலா குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கட்சி சார்ந்த விஷயங்களை தம்பிதுரையும், பன்னீர்செல்வமும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்” என்பதுதான் அந்த போஸ்ட். அதற்கு லைக் போட்டு ஷேரும் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து கமெண்ட்டில், ‘எது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்... ஜெயலலிதா சீக்கிரம் நலம் பெறட்டும்!’ என்று போட்டது. அதற்கு லைக் போட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: