
இந்நிலையில் நேற்று விரிவான மருத்துவ அறிக்கையை வெளியிட்டது அப்பல்லோ. வழக்கத்துக்கு மாறாக இந்த அறிக்கையில், முதல்வருக்கு பல்வேறு நோய்கள் இருப்பதாகக் கூறி, நீண்ட நாட்கள் அவர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியில் சொல்லவிடாமல் தடுப்பது அவரது உயிர்த்தோழி எனப்படும் சசிகலாதான். நான் வழக்குத் தொடர்ந்த பிறகுதான் முதல்வர் உடல்நிலை குறித்து இந்த அளவு தகவல்களையாவது வெளியிட்டுள்ளார்கள். ஜெயலலிதா உடல்நலத்துக்குப் பொறுப்பு அப்பல்லோ நிர்வாகமும், சசிகலாவும். ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் ஏதேனும் விபரீதம் நேர்ந்தால், இவர்களைச் சும்மா விடமாட்டேன். சிறையில் தள்ளுவேன்” என்றார். மின்னம்பலம்,காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக