திங்கள், 3 அக்டோபர், 2016

அப்போலோவில் திருமாவளவன் .. சசிகலா கூட சந்திக்கல ... அம்மா குணமாகி வாராய்ங்க .. திருமா ஸ்டேட்மென்ட்

மின்னம்பலம்,காம் : அப்பல்லோவில் திருமா… முழு விபரங்கள்!
’விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அப்பல்லோ மருத்துவமனைக்குப் போயிருக்கிறார்’ என்ற மெசேஜ் மதியம் 12.47 மணிக்கு வாட்ஸ் அனுப்பியிருந்தது. அதன் பிறகு சில மணி நேரங்கள் கழித்து ஒரு டீட்டய்ல் மெசேஜ் அனுப்பியது.
“திருமாவளவன் மருத்துவமனைக்குப் போவதை பற்றி முன்கூட்டியே சொல்லவில்லை. ‘அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் உடல்நிலை பற்றி விசாரிக்க தலைவர் திருமாவளவன் மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டார்.’ என்ற மெசேஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குருப்பில் வந்தபோது மதியம் 12.14. அதன் பிறகு இந்த தகவல் உளவுத் துறைக்குப் போய் சேருவதற்கு முன்பு திருமாவளவன் அப்பல்லோவுக்குப் போய்விட்டார். வழக்கம்போல காவல் துறை அதிகாரிகள் மருத்துவமனை வாசலில் திருமாவின் காரை நிறுத்திவிட்டார்கள். ‘நான் முதல்வரை பார்க்க வந்திருக்கேன்!’ என திருமா காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு, போலீஸாரிடம் சொன்னார். அவர்கள் உடனே மருத்துவமனையில் உள்ள யாருக்கோ போனில் தகவல் சொன்னார்கள். அங்கிருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும் அப்பல்லோ மெயின் கேட் திறந்தது. திருமா கார் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டது.

மருத்துவமனைக்குள் போய் இறங்கிய திருமாவை அப்பல்லோ டாக்டர்கள் இருவர் வரவேற்று உள்ளே அழைத்துப் போனார்கள். முதல் தளத்தில் உள்ள ரிசப்சனுக்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டார் திருமா. அங்கே அமைச்சர்கள் சில நின்றிருந்தார்கள். அவர்களே வந்து திருமாவிடம் பேசினார்கள். அதற்குள் திருமா வந்திருக்கும் தகவல் இரண்டாவது தளத்தில் உள்ள யாருக்கோ சொல்லப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் திருமாவை இரண்டாவது தளத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே தம்பிதுரையும், பன்னீர்செல்வமும் காத்திருந்தார்கள். திருமாவைப் பார்த்து இருவரும் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொன்னார்களாம். ‘முதல்வர் உடல்நிலை எப்படி இருக்குன்னு விசாரிக்க வந்தேன். நான் முதல்வரை பார்க்கணும்’ என்று சொல்லியிருக்கிறார் திருமா.
‘நீங்க வந்தது எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷம். இருங்க கேட்டுட்டு வரோம்..’ என்று சொல்லிவிட்டு தம்பிதுரையும், பன்னீரும் மூன்றாவது தளத்தில் உள்ள ஒரு அறைக்குள் போயிருக்கிறார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள். ‘நீங்க வந்திருக்கும் தகவல் சொன்னோம். முதல்வர் இப்போது நலமாக இருக்காங்க. நீங்க வந்திருக்கும் தகவல் சொன்னோம். மகிழ்ச்சி. விரைவில் முதல்வர் வீடு திரும்புவார்கள்…’ என்று வழக்கம்போல மையமாக சொல்லியிருக்கிறார் தம்பிதுரை. யாரிடம் சொன்னார் என்ற தகவலை உறுதியாக சொல்லவில்லை. திருமாவும் விடாமல், ‘நான் முதல்வரைப் பார்த்து பேச முடியாதா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு தம்பிதுரை, ‘முதல்வர் இப்போது நல்லமுறையில் குணமடைந்து வருகிறார். அவரைப் போய் பார்த்தால், நம்மிடம் இருந்து எதாவது இன்பெக்‌ஷன் ஆகிவிடும் என மருத்துவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் பார்வையாளர்களி யாரையும் அனுமதிப்பது இல்லை. நீங்க தவறாக நினைக்க வேண்டாம். முதல்வர் கார்டன் வந்த பிறகு உங்களை சந்திப்பார்… நீங்க நேரில் வந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி…’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள் பன்னீரும், தம்பிதுரையும்.
அதன் பிறகுதான் வெளியே வந்த திருமாவளவன், ‘நான் முதல்வரை சந்திக்கவில்லை. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் சொன்னார்கள். நான் சென்றபோது மருத்த்துவமனையில் எந்த கெடுபிடியும் இல்லை’ என்று சொன்னார். ”என்பதுதான் அந்த மெசேஜ்.
“எப்படி எந்த கெடுபிடியும் காட்டாமல் திருமாவை இரண்டாவது தளம் வரை அனுமதித்தார்கள்?” என்ற கேள்வியை கேட்டது ஃபேஸ்புக். உடனே பதிலை அனுப்பியது வாட்ஸ் அப்.
“இந்த கேள்விக்கு பதிலை சொல்வதற்கு முன்பு இன்னொரு தகவலை சொல்கிறேன். திருமா இரண்டாவது தளத்துக் சென்றபோது, ’வெய்ட் பண்ணுங்க… கேட்டுட்டு வரோம்..’ என்று சொல்லி தம்பிதுரையும், பன்னீரும் ஒரு அறைக்குள் போனார்கள் இல்லையா… அது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட்ள்ள அறை அல்ல. சசிகலாவும் இளவரசியும் தங்கியிருக்கும் ஷூட் ரூம் அது. அவர்கள் இருவரும் பெரும்பாலான நேரம் அந்த அறையில்தான் இருக்கிறார்களாம். அவர்களிடம்தான் உள்ளே போய் பேசிவிட்டு வந்து திருமாவிடம் பதில் சொல்லியிருக்கிறார்கள். இதுவரை முதல்வரை சந்திக்க அமைச்சர்கள், கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் என்றுதான் வந்தார்கள். கூட்டணியில் இல்லாத மாற்றுக் கட்சியில் இருந்து முதலில் ஒருவர் மருத்துவமனைக்குள் வருகிறார் என்றால் அது திருமா தான். இப்போது அவரை உள்ளே அனுமதிக்காமல் இருந்தால், இன்னும் சர்ச்சையாகியிருக்கும். திருமா வந்திருக்கும் தகவலும், அவரை உள்ளே அனுமதிக்கலாமா என்ற அனுமதியும் சசிகலாவிடம்தான் உடனே கேட்டிருக்கிறார்கள். அவர் ஓகே சொன்ன பிறகுதான் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார் . ’மாற்றுக் கட்சியில் உள்ள ஒருவர் மருத்துவமனைக்குள் வந்துவிட்டுப் போய், முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்று சொன்னால் அதை மக்களும் நம்புவார்கள். தேவையில்லாமல் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதனால் திருமாவளவன் வரட்டும்..’ என சசிகலா தான் சொல்லியிருக்கிறார். ஆனாலும், திருமாவை சசிகலா சந்திக்கவில்லை.” என்ற பதில் மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது.
தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றினை போஸ்ட் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.
“காவல் துறை ஆணையர் ஜார்ஜ் தினமும் காலையில் கட்சிக்காரர்களுக்கு முன்பே அப்பல்லோவுக்கு வந்துவிடுகிறார். இன்றும் காலையில் அவர் சீக்கிரமே வந்துவிட்டார். முதல் தளத்தில் உள்ள ரிசப்சனில்தான் அவரை பெரும்பாலான நேரம் பார்க்க முடிகிறது. அமைச்சர்கள் வந்தாலும் இங்கேதான் இருக்கிறார்கள். வெளிநபர் ஒருவரை இரண்டாவது தளத்துக்கு அழைத்துப் போனார்கள் என்றால் அது திருமாவாகத்தான் இருக்கும். அதற்கு காரணம், வாட்ஸ் அப் சொன்னதாக கூட இருக்கலாம். அமைச்சர்கள் தேர்தல் தொடர்பான வேலைகளை யாரும் பார்ப்பதில்லை. அவர்களின் முழு கவனமும் அப்பல்லோவில் தான் இருக்கிறது. ஒருவேளை முதல்வரை பார்க்க திடீரென அனுமதி கொடுத்து, அந்த நேரத்தில் நாம் இல்லாமல் போய்விடக் கூடாது என்ற பயத்தில்தான் காலையில் மருத்துவமனைக்கு வந்தால், இரவு வரை யாரும் வெளியே போவதே இல்லை. மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் இருந்து அனைவருக்கு உணவு பறிமாறப்படுகிறது. தரை தளத்தில் கெஸ்ட்களுக்கான டைனிங் ஹால் இருக்கிறது. அங்கே வைத்துதான் அனைவருக்கும் உணவு கொடுக்கிறார்கள். சசிகலாவுக்கும், இளவரசிக்கும் மட்டும் மூன்று வேளையும் உணவு போயஸ் கார்டனில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஒரே காரில் வந்தால், மீடியாவுக்கு சந்தேகம் வரும் என்பதால், ஒரு வேளைக்கு ஒரு கார் என மாறி மாறி கார்டனுக்கும் அப்பல்லோவுக்கும் போய் வருகிறது. “ என்பதுதான் அந்த போஸ்ட். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்துவிட்டு வாட்ஸ் அப்பும் ஆஃப் லைனில் போனது.

கருத்துகள் இல்லை: