மட்டக்களப்பு,
மகிழடித்தீவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் அடங்கிய நாகர்களது வேள்ணாகன்,
நாகன் மகன் கண்ணன் போன்ற பட்டப்பெயர்கள் எழுதப்பட்ட 2000ஆண்டு பழையான
பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்களை பார்வையிட்ட கலாநிதி சி.பத்மநாதன் (தகைசார் பேராசிரியர்
வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம், வேந்தர் யாழ். பல்கலைக்கழகம்)
இவ்வாறான பெயர்கள் அடங்கியுள்ளது என குறிப்பிட்டார்.
நாகர் காலத்து பொருட்களான அம்மி, குழவி, ஓட்டுச்சிதைவுகளில்; தமிழ்
பிராமி எழுத்துக்கள் காணப்படுவதுடன் இங்கு அம்மியும் குழவியும் சேர்ந்ததாக
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் பிற்காலத்தில் இருந்த
வன்னிமைகளை போல 2000ம் ஆண்டுகளுக்கு முதல் நாகரின் சிற்றரசு இருந்தது.
அல்லது அவர்களது சிற்றரசு ஒன்றில் கொக்கட்டிச்சோலை அடங்கி இருந்தது என்றும்
கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் முன் மண்டபத்தின் வாயிலில்
உள்ள கற்களை ஆராய்ந்ததில் அவை தாந்தாமலையில் இருந்து கொண்டு
வரப்பட்டுள்ளதுடன், அவற்றிலும் நாகமன்னர்களது பெயர்கள் இருப்பதும்
குறிப்பிடத்தக்க சலசலப்பு.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக