குஜராத் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக மத்திய அரசு பெருமை பேசி வருகிறது. அப்படி என்றால் சென்ற வாரத்தில் மட்டும் ஏன் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்? அப்பாவி பெண் கொடூரமாக தாக்கப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஏன் ஜெயிலில் அடைக்கப்பட்டார்? வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதில் முறைகேடு செய்தவர்கள் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை?
படேல் சமூகத்தினர் மீதான போலீசாரின் வன்முறை ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான மாநில அரசு தனது சுயலாபத்திற்காக உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தி வருகிறது. இதுதான் குஜராத் மாடலா? இந்தியா முழுவதும் இந்த மாடலை அறிமுகப்படுத்த போகிறேன் என பெருமை பேசி வரும் பிரதமர் மோடியின் கனவு நிஜமானால் என்ன நடக்கும் இந்த நாட்டில்? குஜராத் மாடல் என்பது ஒரு கட்டுக்கதை. அதற்கு பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுகளை விரைவில் நான் அவிழ்ப்பேன். குஜராத் மாடல் பற்றிய உண்மைக்கு புறம்பான ஒன்றை எங்கள் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருவது நாட்டை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாக அமைந்துவிடும்.
இவ்வாறு ஹர்திக் படேல் தெரிவித்தார் dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக