திங்கள், 5 அக்டோபர், 2015

சிரியா அதிபர் அசாத்: ரஷ்யா, ஈரான் ஈராக் கூட்டணி வெற்றி பெறாவிட்டால் அழிந்துவிடும்


சிரியா, ரஷ்யா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணி வெற்றி பெறவில்லை என்றால், கிழக்கு ஆசிய நாடுகள் அழிந்துவிடும், என்று சிரியா அதிபர் அசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த அசாத், "சிரியா, ரஷ்யா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணி வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லையென்றால் மத்திய கிழக்கு ஆசியா அழிவையே சந்திக்கும். இந்த போரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் தீவிரமாக ஈடுப்பட்டால், அவர்கள் வேகமாக பரவுவதை தடுப்பதோடு மட்டும் அல்லாமல் அவர்களை வீழ்த்த முடியும்” என்று கூறியுள்ளார். chennaionline.com

கருத்துகள் இல்லை: