புதன், 7 அக்டோபர், 2015

தினமலர்; பீஹாரில் பா.ஜ., வெற்றி பெறும்: கருத்துக்கணிப்பில்....

பாட்னா:'பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆளும் கட்சியாக மாறும்' என, கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.மொத்தம், 243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீஹாரில், ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மக்களின் எண்ணம் பீஹார் தேர்தல் வரும் 12ல், துவங்கி, அடுத்த மாதம் 5ல், முடிவடைகிறது; அடுத்த மாதம் 8ல், ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.'மக்களின் எண்ணம்' என பொருள்படும், 'ஜனதா கா மூடு' என்ற பெயரில், ஜீ 'டிவி' கடந்த மாத இறுதியில் கருத்துக்கணிப்பு நடத்தியது. போன் வாயிலாக, 35 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: * மொத்தம், 147 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்
* முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி, 64 இடங்களை மட்டுமே பிடிக்கும்   அந்த அளவிற்கு பணம் பீகார் தேர்தலில் இறக்கிவிடப்பட்டுள்ளது....ஏழைகளை பற்றி பேசும் பணக்காரகட்சி அகில உலக BJP

* இரு கூட்டணிகளுக்கும் இடையே, 32 தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும்; யார் வெல்வர் என்பதை கணிக்க முடியாது
* தேசிய ஜனநாயக கூட்டணி, 53.8 சதவீத ஓட்டுகளும்; நிதிஷ் கூட்டணி, 40.2 சதவீத ஓட்டுகளும் பெறும். பிறர், 6 சதவீத ஓட்டுகளை பெறுவர்
* முதற்கட்ட தேர்தல், 49 இடங்களுக்கு நடைபெற உள்ளது. அதில், பா.ஜ., கூட்டணி, 53.8 சதவீத ஓட்டுகளைப் பெறும்; லாலு கூட்டணிக்கு, 40.1 சதவீத ஓட்டுகள் கிடைக்கும்
* பிற நான்கு கட்டங்களிலும், பா.ஜ., கூட்டணி தான், அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும். குறிப்பாக, நக்சல் பாதிப்பு பகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி தான் வெற்றி பெறும்
* முதல்வர் நிதிஷின் சொந்த மாவட்டமான நாலந்தாவில், போட்டி கடுமையாக இருக்கும். எனினும், அங்கு, பா.ஜ., கூட்டணி, 48 சதவீத ஓட்டுகளையும், நிதிஷ் கூட்டணி, 44 சதவீத ஓட்டுகளையும் கைப்பற்றும்
* பா.ஜ., கூட்டணிக்கு, முஸ்லிம்களின், 35.9 சதவீத ஓட்டுகள் கிடைக்கும்; நிதிஷ் கூட்டணிக்கு, 57.9 சதவீத முஸ்லிம்கள் ஓட்டளிப்பர்
* யாதவர்களின் ஓட்டுகளில், நிதிஷ் கூட்டணி, 50.2 சதவீத ஓட்டுகளையும், பா.ஜ., கூட்டணி, 43.7 சதவீத ஓட்டுகளையும் பெறும்.இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீஹார் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்தல் பிரசாரம் துவங்கிவிட்டது போல, காரசார கருத்துக்கணிப்புகளும் துவங்கிவிட்டன. மாறி வரும் வாய்ப்புகள்கடந்த மாதம் 10ல், 'இந்தியா டுடே' பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில், நிதிஷ் அணி, 36 சதவீத ஓட்டுகளையும்; பா.ஜ., அணி, 30 சதவீத ஓட்டுகளையும் பெறும் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு சில நாட்கள் கழித்து, செப்டம்பர் 24ல், மற்றொரு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.இப்போது, பா.ஜ.,வுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக, ஜீ 'டிவி' கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது தினமலர்.com

கருத்துகள் இல்லை: