சென்னை:'மருத்துவக் கல்லுாரி உள்ளிட்ட தொழிற்கல்வி கூடங்களில் சேர,
நுழைவுத் தேர்வு தேவையில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது நேற்றைய அறிக்கை:பொது
நுழைவுத் தேர்வு மூலம், மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை
மேற்கொள்ள வேண்டும்' என, அகில இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய
அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக்
கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை பல முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.தமிழகத்தில்,
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இட ஒதுக்கீட்டுக் கொள்கைபடி மாணவர்
சேர்க்கை நடைபெறுகிறது. கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நலன் கருதி, நுழைவுத் தேர்வு
ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொது நுழைவுத் தேர்வு சம்பந்தமாக, தற்போது உள்ள நெறிமுறைகளே தொடர்வதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும்.
மருத்துவக் கல்லுாரி உள்ளிட்ட தொழில் கல்விக் கூடங்களில், மாணவர்கள் சேர்வதற்கு, நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பதே, நிரந்தர முடிவாக இருக்க வேண்டும். மத்திய அரசு, இந்தப் பிரச்னையில், உறுதியாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளா தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக