விசாகப்பட்டினம்: ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில், கட்சியினர் வாணவெடிகளில் உயிருடன் புறாவை வைத்து வெடிக்க வைத்தனர்.
கொவ்ரு நகரில், காங்கிரஸ் கட்சியினரின் இந்த மனிதத்தன்மையற்ற கொடுர செயல்கள் வீடியோவாக பரவி வருகிறது. மாநில கட்சி தலைவர் என். ரகுவீரா ரெட்டியை கவர்வதற்காக, புறாவை வாணவெடியில் வைத்து, வெடியை பற்ற வைத்தனர். பட்டாசு மேலே சென்று வெடித்ததும், வெப்பம் காரணமாக புறாக்கள் கருகிய நிலையில் இறந்து தெருவில் விழுந்தன.
வாணவெடியில் உள்ள அட்டையில், புறாவை இறுக்கமாக கட்டி வைத்து வெடிக்க வைத்தனர். பட்டாசு வெடித்ததும், கயிறு அவிழ்ந்து புறா பறக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பட்டாசில் இருந்து வெளியான வெப்பம் காரணமாக புறாக்கள் இறந்து மைதானத்திற்குள்ளேயே விழுந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று சார்பில் போலீசாரிடம் புகார் செய்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது பற்றி கருத்து தெரிவிக்க காங்கிரசார் மறுத்துவிட்டனர். தினமலர்.com
இந்த சம்பவம் தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று சார்பில் போலீசாரிடம் புகார் செய்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது பற்றி கருத்து தெரிவிக்க காங்கிரசார் மறுத்துவிட்டனர். தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக