வெள்ளி, 9 அக்டோபர், 2015

தஸ்லிமா நஸ்ரின்:இந்தியா ஒரு சவுதி அரேபியாவாக மாறுகிறதா? India becoming Hindu Saudi? .taslima nasreen

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த வருட தொடக்கத்தில் கச்சேரி நடத்திய பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகரான குலாம் அலியின் (74) கலை நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை மும்பையின் ஷண்முகானந்த ஹாலில் நடைபெற இருந்தது. பல்வேறு இந்திய சினிமாக்களில் பாடியவரும், புகழ்பெற்ற கசல் பாடகருமான இவரது நிகழ்ச்சியைக் காண மும்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கலை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் உரிமையாளரிடம், நிகழ்ச்சியை ரத்து செய்து விடுமாறு சிவ சேனா கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மிரட்டியுள்ளனர். இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி தொடர் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வரும் நிலையில், தங்கள் பகுதியில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று சிவசேனா கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவ சேனாவின் இந்த நடவடிக்கையால் இந்த கலை நிகழ்ச்சி அதன் ஏற்பாட்டாளர்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது.


சிவ சேனாவின் எதிர்ப்பால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு பல முக்கிய பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.  இந்நிலையில் பிரபல எழுத்தாளர் தஸ்லிமா இதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் “சிவசேனா மிரட்டலால் மும்பையில் நடக்க திட்டமிடப்பட்டிருந்த பாடகர் குலாம் அலியின் கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இந்து சவுதியாக மாறுகிறதா?” என்றும், மற்றொரு டுவிட்டில் “ குலாம் அலி ஒரு பாடகர். அவர் தீவிரவாதி இல்லை. தயவு செய்து  ஒரு பாடகருக்கும், தீவிரவாதிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.   மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: