அவர் அறிவித்ததாவது: அமைச்சர் அசிம் அஹமது கான் மீதான ஊழல் புகார், நேற்று இரவு தான் எங்களுக்கு தெரிய வந்தது. தீர விசாரித்ததில், ஆடியோ கேசட்டில் இடம் பெற்றுள்ளது, அவர் குரல் தான் என்பதை உறுதி செய்தோம். அதையடுத்து, அவரை பதவியிலிருந்து நீக்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை இப்போது வௌியிடுகிறோம். இந்த முடிவை நாங்களாகத் தான் எடுத்துள்ளோம்; எங்களுக்கு எந்த இடத்திலிருந்தும் நெருக்கடி வரவில்லை. அமைச்சர் பொறுப்பிலிருந்து, அசிம்
அஹமது கான் நீக்கப்படுகிறார்.
அவர் செய்த முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி, உண்மை
வௌிப்படுத்த வேண்டும்; அதற்காக, பரிந்துரை செய்துள்ளோம்.ஊழல் செய்தவர்கள்
யாராக இருந்தாலும், அவர்களை தப்ப விட மாட்டோம். அமைச்சர்களாக இருந்தாலும்
சரி; எம்.எல்.ஏ., அல்லது அதிகாரிகளாக இருந்தாலும் சரி; ஆதாரங்களுடன்
வாருங்கள்; அவர்களை பதவியிலிருந்து, டிஸ்மிஸ் செய்கிறேன்.
நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை நடத்துவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன். நாங்கள் எடுத்துள்ளது போன்ற நடவடிக்கையை, மத்தியில் ஆளும், பா.ஜ., மேற்கொள்ள வேண்டும்.பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ம.பி.,யின் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை, பதவியிலிருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
அசிம் அஹமது கான் வகித்த துறை, ஆம் ஆத்மியின், பள்ளிமரான் தொகுதி, எம்.எல்.ஏ.,வான, இம்ரான் ஹுசேனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக