சனி, 1 பிப்ரவரி, 2014

தற்காப்புக்காக கொலை செய்த கல்லூரி மாணவி விடுதலை ! பலாத்காரம் செய்ய முயன்ற அக்காள் கணவனை கொன்றார்

சென்னையில் பாலத்காரம் செய்ய முயன்ற அக்காள் கணவரை தற்காப்புக்காக கொலை செய்த கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாமல் காவல்துறையினர் விடுவித்தனர் சென்னையை அடுத்த மாதவரம் டெலிபோன் காலனியில் வசித்தவர் மேத் இவர் ஹேமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். பெற்றோர் இல்லாததால் ஹேமாவின் தங்கை ஹரிப்பிரியா, அவருடனே வசிதது வந்தார். அக்காள் கணவன் மேத்யூ, ஹரிப்பிரியாவிற்கு கடந்த 7ஆண்டுகளாக அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் ஹரிப்பிரியா மிகுற்த மனஉளைச்சலில் இருந்தார். வியாழக்கிழமையன்று அதிகமாக மது அருந்திய மேத்யூ, போதையின் உச்சத்தில் தனது மனைவி ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மயக்கமடைய செய்துள்ளார். பின்னர் வெளியே தள்ளி கதவை பூட்டிய அவர். ஹரிப்பிரியாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மேத்யூவின் கழுத்தில் ஹரிப்பிரியா தாக்கியுள்ளார். இதில் மேத்யூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் இந்திய தண்டனை சட்டம் 302-வது சட்டப்பிரிவின் கீழ் ஹரிப்ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை நடத்திய போலீஸார் ஹரிப்பிரியாவிடம் எழுதி வாங்கிக்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் விடுவித்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்திய தண்டனை சட்டம் 100-வது பிரிவின் கீழ் ஆறு விதமான தற்காப்பு சம்பவங்களில் எதிராளியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள, பாதிக்கப்படும் நபர் ஆயுதத்தை எடுத்தால் தப்பில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பலாத்கார முயற்சியின் போது, பெண் ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள, என்ன வேண்டுமானாலும், செய்யலாம் என்பதே அதன் அர்த்தமாகும். எனவே இன்று காலை வரையிலும் மாணவி ஹரிப்ரியாவை நாங்கள் சிறைக்கு அனுப்பவில்லை. தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சாதாரண சட்டப்பிரிவின் கீழ் அதனை மாற்றலாமா? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம் tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: