கோபாலபுரத்தில் தன்னை
சந்தித்தபோது, மு.க.ஸ்டாலினை கொன்றுவிடுவதாக மிரட்டினார் அழகிரி என்று
திமுக தலைவர் கலைஞர், அழகிரியை கட்சியில் இருந்து நீக்கியது குறித்த விளக்க
பேட்டியில் குறிப்பிட்டார்.
இதைக்கேட்டதும்
அழகிரியும், அவரது குடும்பத்தினரும் அப்செட் ஆனார்கள். இதையடுத்து
அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த விளக்கத்தில், உண்மை கலைஞர் கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
அழகிரி முழு விளக்கம்
அழகிரி முழு விளக்கம்
சென்னையில்
இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர், அழகிரி நீக்கம் பற்றி
உருக்கமாகவும், அதிர்ச்சியாகவும் சில தகவல் தெரிவித்தார். இதையடுத்து மதுரையில் அழகிரி தனது இல்லத்தில் செய்தியாளர்களை கூட்டி, கலைஞர் பேட்டிக்கு உருக்கமாக விளக்கம் அளித்தார்.
அவர்,
‘’இன்று மதியம் தொலைக்காட்சியில் தொலைக்காட்சியில் தலைவர் கலைஞருடைய
பேட்டியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். என் மீது இப்படிப்பட்ட
ஒரு அபாண்டத்தை சுமத்துவார் என்று, நான் கனவில் கூட
நினைத்துப்பார்த்திருக்க முடியாது. ஆனால் அதை அவர் எனக்கு வழங்கிய
பிறந்த நாள் வாழ்த்தாக நான் ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும், நான் சில
விளக்கங்களை இந்த நேரத்திலே சொல்ல விரும்புகிறேன்.
நான்
24ம் தேதி காலையில் தலைவரை சந்தித்து, பல நியாயங்களை,
எடுத்துச்சொன்னேன். தொண்டர் களுடைய குற்றச்சாட்டுகளையும்,
ஒன்றியச்செயலாளர்களின் குற்றச்சாட்டையும் எடுத்துக்கொண்டு தலைவரிடம்
காண்பித்தேன். அதற்கு கிடைத்த பரிசு, என்னை கட்சியில் இருந்து சஸ்பென்ட்
செய்தது. நியாயத்திற்காக, தொண்டனுக்காக போராடியதற்காக, இப்படிப்பட்ட பரிசு
கிடைத்தது.
அன்றைய
தினம் இது குறித்து பொதுச்செயலாளர் விளக்கியபோது, என்னை விலக்கியதற்கான
காரணங் களையெல்லாம் சொல்லியிருக்கிறார். பல காரணங்களை
சொல்லியிருக்கிறார். அந்த காரணத்தி லெல்லாம் இன்று தலைவர் சொன்ன,
எந்தப்பழியும் அதில் இல்லை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
பொதுச்செயலாளரின் ஒழுங்கு நடவடிக்கை முரசொலி பத்திரிகையிலே வந்திருக்கிறது.
( முரசொலியை எடுத்துக்காட்டினார்)
நான்
குறைகளை ஏன் அங்கே எடுத்துக்கொண்டு சொன்னேன் என்றால், இதை கேட்பதற்கு
அறிவாலயம் இல்லையா? அமைப்பு இல்லையா? என்று பொதுச்செயலாளர்
கேட்டிருக்கிறார். அது நியாயமான கேள்விதான். தொண்டர்களுடைய
குற்றச்சாட்டுகள், ஒன்றிய செயலாளர்களின் குற்றச்சாட்டுகள் எல்லாம்
அறிவாலயத்திற்கு பேக்ஸ் செய்யப்படுகிறது. பேக்ஸ் செய்யப்பட்ட
குற்றச்சாட்டுகள் எல்லாம் மறைக்கப்படுகிறது.
தலைவருக்கோ, பொதுச்செயலாளருக்கோ போய்ச்சேருவதில்லை. இந்த குற்றச்சாட்டையும் நான் தலைவரிடத்திலே சொன்னேன். அதனால், அறிவாலயம் சென்று சொல்வதைவிட, நேரே தலைவரை சந்தி த்து சொன்னேன். இதுதான் உண்மை.
தலைவருக்கோ, பொதுச்செயலாளருக்கோ போய்ச்சேருவதில்லை. இந்த குற்றச்சாட்டையும் நான் தலைவரிடத்திலே சொன்னேன். அதனால், அறிவாலயம் சென்று சொல்வதைவிட, நேரே தலைவரை சந்தி த்து சொன்னேன். இதுதான் உண்மை.
மதுரையில் மட்டுமல்ல.தமிழ்நாடு முழுவதும் இதுமாதிரி குற்றசாட்டுகள் இருக்கின்றன. கட்சித்தே ர்தல்கள் முறையாக நடக்கவில்லை என்று குற்றம் சொன்னேன்.
இன்று
பேட்டியில் கலைஞர் என்ன சொல்லியிருக்கிறார்? இவர் முதலிலேயே
பத்திரிகைகளுக்கு எல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார் என்று
சொல்லியிருக்கிறார். நான் நீக்கப்பட்ட பிறகுதான் எல்லாவற்றையும் வெளியே
சொன்னேன். நீக்கப்பட்ட பிறகுதான், நான் தலைவரை எந்த நோக்கத்தோடு
சந்தித்தேன் என்று சொன்னேன்.
இன்னொரு
உண்மையை சொல்கிறேன். 26ம் தேதி துணை பொதுச்செயலாளர் துரைமுருகனை
காலையிலே அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தேன். அவரிடமும் நியாயம்
கேட்டேன். தலைவரிடம் குற்றச்சாட்டுகள் சொல்லியிருக்கிறேன். நீங்களும் அதை
பரிசீலனை செய்யுங்கள் என்று சொன்னேன். இதுதான் நடந்தது.
அவர்கள் என்ன குற்றச்சாட்டுகள் சொன்னாலும், தொண்டர்கள் நம்பமாட்டார்கள். நான் எப்படிப்பட்டவன் என்பது அவர்களுக்கு தெரியும்.
நான்
முன்பு சொல்லியிருக்கிறேன். இன்றும் சொல்கிறேன். தலைவர்
நல்லாயிருக்கணும். நூறாண்டு களுக்கு மேல் வாழணும். அவருக்கு முன்னாடி
நாங்கள் சாகணும். கலைஞரின் கண்ணீர் எங்கள் பிணத்தின் மீது விழவேண்டும்
என்பதுதான், என் ஆசை’’ என்று தெரிவித்தார். nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக