10 ஆயிரம் கோடி சொத்து!
டெல்லி,
ராஜஸ்தான், குஜராத், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் வைத்துள்ள
பிரபல சாமியார் அசராம் பாபு மீது உ.பி.யை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த
ஆண்டு பாலியல் புகார் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள
ஆசிரமத்தில் தன்னை சாமியார் பல முறை பலாத்காரம் செய்ததாக புகாரில்
கூறியிருந்தார்.
கோர்ட் உத்தரவை தொடர்ந்து அசராம் பாபுவை
போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு
வந்தவுடன் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சகோதரிகள் 2 பேர் அசராம் பாபு
மற்றும் அவரது மகன் நாராயணன் சாய் மீது பாலியல் புகார் கூறினர். இந்த
வழக்கிலும் அசராம் பாபு கைது செய்யப்பட்டார். 2 மாதம் தலைமறைவாக இருந்த
நாராயண் சாயையும் போலீசார் அரியானா எல்லை அருகே பிடித்தனர்.
முதல்
பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை
நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அசராம் பாபுவின் ஆசிரமங்களில் போலீசார்
அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அகமதாபாத்தில்
உள்ள ஆசிரம கட்டிடம் ஒன்றில் கடந்த மாதம் போலீசார் சோதனை நடத்திய போது
ஆயிரக்கணக்கான பத்திரங்கள் கிடைத்தன. வங்கி டெபாசிட்டுகள், கணக்குகள்,
பங்கு முதலீடுகள், கடன் பத்திரங்கள், அரசு பத்திரங்கள் என மொத்தம் ரூ.10
ஆயிரம் கோடிக்கான ஆவணங்கள் கிடைத்தன. தவிர இந்தியா முழுவதும் பல இடங்களில்
நிலங்கள் வாங்கி குவித்திருப்பதற்காக ஆதாரங்களும் கிடைத்தன. நிலத்தின்
மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. சாமியாரின் சொத்துக்கள் குறித்து
வருமான வரித்துறை, அமலாக்க பிரிவு ஆகியோருக்கு போலீசார் தகவல்
அளித்துள்ளனர்.
ஆசிரமத்தில்
இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் 40 மூட்டைகளில் கட்டி
வைக்கப்பட் டுள்ளன. இவை அனைத்தும் விரைவில் அமலாக்க பிரிவிடம் ஒப்பபடைக்கப்படும் என போலீசார் தெரிவித் தனர். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக