ஆற்காடு வீராசாமி இருந்திருந்தால் அழகிரி, ஸ்டாலின் பிரச்சினையைத் தீர்த்து
வைத்திருப்பாரோ...!?
சென்னை: திமுகவில் தலைமைக்கும், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் இடையே உள்ள
இடைவெளியை குறைக்க மீண்டும் ஒரு ஆற்காடு வீராசாமி தேவை என திமுகவில் புதிய
குரல்கள் கேட்கது வங்கியுள்ளதாம்.
ஆற்காடு நா. வீராசாமி, திமுகவில் அதன் தலைவர் கருணாநிதியின் அன்புக்கு
பாத்தியப்பட்டவர். கருணாநிதியின் மனம் அறிந்தவர், அதற்கேற்ப செயல்படுவர்
என்பதால், திமுக இரண்டாம் கட்ட தலைவர்களிடம் அற்காட்டார் மீது மிகுந்த
மரியாதை உண்டு.
திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம், மிக முக்கிய இலாகாவில் வீராசாமி
அமைச்சராக அமர்வார். திமுக பொருளாளராகவும், தற்போது திமுகவின் முதன்மைச்
செயலாளராக பணியாற்றி வருகிறார். ஆனால் முன்பு போல இவர் தீவிர அரசியலில்
ஈடுபடவில்லை.
கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக
பணியாற்றிய போது, தமிழத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதன்
காரணமாக, திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக
ஆற்காடு வீராசாமி மீது கருணாநிக்கு மிகவும் வெறுப்பானது. அதன் பிறகுதான்
ஆற்காடு வீராசாமியின் செல்வாக்கு மங்கிப் போனதாக கூறப்படுவதுண்டு.
கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் உடல் நிலை
சரியில்லை என்ற காரணம் காட்டி இவர் ஓரம் கட்டப்பட்டார். அன்று முதல்
அமைதியாக ஒதுங்கி விட்டார்.
ஆனால் ஆற்காடு வீராசாமி இல்லாமல் போனதால்தான் திமுக தலைமைக்கும், 2ம் கட்ட
தலைமைக்கும் இடையே இடைவெளி அதிகரித்து விட்டதாக திமுகவில் சிலர்
கூறுகிறார்களாம்.
எப்போதாவது திமுக தலைமைக்கும், 2ம் கட்டத் தலைவர்களுக்கும் இடையே மனக்
கசப்பு வந்தால், அது குறித்து இரு தரப்புக்கும் இடையே பாலம் போல செயல்பட்டு
பிரச்சினையைத் தீர்க்க ஆற்காடு வீராசாமி பாடுபடுவார். இதுபோல பல
பிரச்சினைகளும் முன்பு தீர்ந்துள்ளன என்கிறார்கள்.
ஆற்காடு வீராசாமியின் திறமை திமுக பொதுச் செயலாளர் அன்பழன் , துரைமுருகன் ,
கோ.சி.மணி , டி.ஆர்.பாலு போன்ற தலைவர்களுக்கு தெரியும். எனவே, கட்சி
நலன் கருதி ஆற்காடு வீராசாமி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்
அல்லது அவரைப் போன்ற ஒருவரை திமுக தலைமை அடையாளம் காட்ட வேண்டும் என திமுக
நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வலுவான குரல்கள் ஒலித்த வண்ணம்
உள்ளது
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக