மதுரை: மதுரை உட்பட, தென் மாவட்ட தி.மு.க.,வில், மாவட்டச் செயலர்கள்
மீது அதிருப்தியில் உள்ள, தி.மு.க., நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் அதிரடி
முயற்சியில், அழகிரியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.இதற்கு,
அழகிரியிடமிருந்து, 'கிரீன் சிக்னல்' கிடைத்து விட்டதால், அதிருப்தி
தி.மு.க., உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
போஸ்டரால் பிரச்னை: >
>லோக்சபா
கூட்டணி தொடர்பாக அழகிரி தெரிவித்த கருத்து, பிறந்த நாள் போஸ்டர்கள்
ஏற்படுத்திய சர்ச்சை போன்றவற்றால், மதுரையில் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு
நீக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக அழகிரியும் நீக்கப்பட்டார். இதன் பின்,
தி.மு.க., விற்கு எதிராக தொடர்ந்து, அழகிரி கருத்து கூறி வருகிறார்.
இந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் கூறியதா வது:அழகிரியைப்
பற்றி இல்லாத குற்றச்சாட்டு களை, ஸ்டாலினிடமும், கருணாநிதியிடமும்
தொடர்ந்து சொல்லியதால், தற்போது அவர் கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டுள்ளார். அவர், நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியானவுடன்,
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும், தி.மு.க.,வினர் எங்களை தொடர்பு
கொண்டு ஆறுதல் கூறி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்கின்றனர்.
திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி,
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து, அதிக எண்ணிக்கையில்
பேசினர்.
இத்தகவல் தெரிந்து தான், 'தென் மாவட்டத்தில் அழகிரிக்கு ஆதரவு ஒன்றும் பெரிதாக இல்லை' என்று, 10 மாவட்டச் செயலர்கள், சென்னை சென்று கருணாநிதியிடம் கூறியுள்ளனர்.அழகிரி தெரிவித்தது போல், அவரை கட்சி நீக்கிய பின் தான், எங்களுக்கு வலிமை ஏற்பட்டு உள்ளது.
ல மாவட்டங்களிலும் உள்ள அதிருப்தியாளர்களை, தற்போது ஒருங்கிணைத்து வருகிறோம். இதற்காக, 'ஐவர் குழு' உருவாக்கப்பட்டுள்ளது.மதுரை வந்துள்ள அழகிரியுடன் ஆலோசனை நடத்திய பின், அவர் உத்தரவுப்படி நாங்கள் செயல்படுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அழகிரி பேட்டி: முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் இருந்து விமானம் மூலம், நேற்று மாலை, மதுரை செ றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில்,
அவர் கூறியதாவது:வரும், 30ம் தேதி, என் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதற்காக மதுரை செல்கிறேன். பிறந்த நாள், ஏழை, எளிய மக்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.இரண்டு நாளாக, கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசிக் கொண்டு இருக்கிறேன். பிறந்த நாள் முடிந்த பிறகு, அடுத்த கட்ட முடிவை அறிவிப்பேன். தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்திப்பது குறித்து, பிறந்த நாள் முடிந்த பின் பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினா dinamalar.com
மாவட்ட செயலர்கள்:

ஆலோசனைக்குப்பின்...:ப

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக