இரண்டாம்
உலகப் போருக்கு பின் முதன் முறையாக இந்தியா ஜப்பானிடமிருந்து 1.65
பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து
கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெளிநாட்டு சந்தைகளில் பாதுகாப்பு வாகனங்களை
விற்பதில்லை என்ற அந்நாட்டு பிரதமரின் தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. தலா
110 மில்லியன் டாலர் விலை கொண்ட 15 விமானங்களை வாங்க அரசு முடிவு
செய்துள்ளது. இது இரு நாட்டு உறவில் மற்றுமொரு மைல் கல்லாக அமைந்துள்ளதாக
இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பான் நாட்டின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் விமானங்களை
வடிவமைத்து கட்டமைக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக பிரதமர் மன்மோகன்
சிங் கூறினார்.
இவ்விமானம் அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலை நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு துறை அதிகாரியான கவுதம் பம்பாவல்லே கூறுகையில்:
பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளும் வலுவான ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளதாகவும், ஜப்பான் தொழில்நுட்பம் நமக்கு தேவை, ஜப்பானிய முதலீடு நமது நாட்டிற்கு தேவை என்று அவர் மேலும் கூறினார். வெளியுறவு கொள்கையில் புதிய மாற்றம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக