திங்கள், 27 ஜனவரி, 2014

அழகிரியிடம் திமுக சமரசம் ?

குழந்தையை  தந்தை திட்டுவதுபோல, 
மாணவனை ஆசிரியர் திட்டுவது போலத்தான்
நான் திமுகவை விமர்சித்
தேன் : அழகிரி

திமுக தோற்கும். திமுகவுக்கு எதிராக நான் செயலபடவேண்டியதில்லை. திமுகவே தோற்கும் நிலையில் நிலையில் தான் உள்ளது என்று விமர்சித்த மு.க.அழகிரி, ’’31 ம் தேதி என் மனதை திறக்கப்போகிறேன்.  ரகசியத்தை வெளியிடப்போகிறேன்’’ என்றெல்லாம் சஸ்பென்ஸ் வைத்து பேசி, திமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய அழகிரி திடீர் அந்தர் பல்டி அடித்து திமுகவின் நலனுக்காகவே கட்சியை விமர்சித்தேன் என்று கூறினார். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நேற்று மதுரை சென்றார் அழகிரி.  இன்று, தேனி,திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து அழகிரி ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர்.  மதுரை பழங்காநத்தத்தில் உள்ள அழகிரி வீட்டு முன்குவிந்தனர்.   இவர்களை சந்திப்பதை தவிர்த்தார் அழகிரி.  ஆதரவாளர்கள் பிடிவாதம் காட்டியதால், வெளியே வந்து அவர்களை சந்தித்தார். ‘’திமுக தோற்கும் என்று நான் சொன்னது.  கட்சி தோற்பதற்காக சொல்லவில்லை.   நான் தலைவர் கலைஞரிடம்,  மதுரையில் பலர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.   மதுரை கழகம் கலைக்கப்பட்டிருக்கிறது.   திரும்பவும் பழையபடி அவர்களை பதவிக்கு கொண்டுவாருங்கள். 
அதுபோல,  மதுரை புறநகரத்திலும் மாநகரத்திலும் கிட்டத்தட்ட 10 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களையெல்லாம் நாம் கழகத்திலே இணைத்துக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டேன். அதுமட்டுமல்ல,  ஒரு வீட்டுக்கு 5 ஓட்டு என்றாலும்,  5 ஆயிரம் ஓட்டு நமக்கு இழப்பு ஏற்படும்.  அதனால அவர்களை எல்லாம் மீண்டும் கழகத்தில் சேர்க்க வேண்டும் என்று முறையிட்டேன்.   அந்த அடிப்படையில்தான், இப்படியே நீக்கிக்கொண்டே போனால்,  இந்த படலம் தொடர்ந்துகொண்டே போனால்,  கட்சி தோற்கும் என்று அந்த அடிப்படையில்தான் சொன்னேன். அதுமட்டுமல்லாமல்,  நான் என்ன எண்ணத்தோடு சொன்னேன் என்றால்,  வீட்டிலே ஒரு பிள்ளையை கண்டிக்கிறோம் என்றால்,  ஒரு தாயும், தந்தையும் பிள்ளையைப்பார்த்து, ‘நீ உருப்படாம போ’ என்று சொன்னால்,  அதுக்காக குழந்தை உருப்படாம போகவேண்டும் என்ற அர்த்த அல்ல.   மாணவர்களை ஆசிரியர்கள், நீ உருப்பட மாட்ட என்று திட்டுவார்கள்.  அவன் உருப்படாம போகணும் என்கிற எண்ணத்தில் அல்ல.  அவன் நல்லா வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அப்படி திட்டுவார்கள்.  அதுபோலத்தான் நானும் கட்சி தோற்கும் என்று கூறினேன். கட்சி என்னை தற்காலிகமாக நீக்கம் செய்திருக்கிறது.  பிறந்த நாள் முடியட்டு.  அதன்பிறகு உரியவர்களிடம் பேசி,  ஆகவேண்டியதை பார்க்கலாம்’’ என்று தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை: