ராமேஸ்வரம்: பாரம்பரியமும், வரலாற்றுப் பெருமையும் மிக்க பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழாவை
நாட்டின் பெரும் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம்
தீவையும் இணைக்கும் வகையில் மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடையில் பாம்பன் வாராவதியில் புதிய பாலம் கட்டப்படும் என கடந்த 1902ம் ஆண்டு ஆங்கிலேயே அரசு அறிவித்தது. கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கட்டுமான பணி 1913ம் ஆண்டு டிசம்பரில் முடிந்தது.
1914ம் ஆண்டு ஜனவரியில் பாம்பன் பாலத்தில் ரயிலை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. பிப். 24ம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி, முதல் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது.
பின்னர் டிசம்பரில் சரக்கு ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி 2014 பிப். 24ம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இந்திய ரயில்வே துறையால் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.
இதன் துவக்க விழா பாம்பனில் இன்று நடைபெறுகிறது. நிறைவு விழா பிப். 24ம் தேதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பாம்பன் ரயில் நிலையத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு அமைச்சர் சுந்தரராஜ் தலைமையில் நூற்றாண்டு விழாவை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைக்கிறார்.
விழாவில், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பின்னர் ராமேஸ்வரம் அரசு நூலகத்தில் நடைபெறும் விழாவில் நூலகத்திற்கான கூடுதல் கட்டிடத்தை அப்துல்கலாம் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு ராமேஸ்வரம் கோசுவாமி மடம் வளாகத்தில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் நடைபெறும் விழாவில் கலாம் கலந்து கொண்டு ‘பசுமை ராமேஸ்வரம்‘ திட்டத்தை துவக்கி வைத்து பேசுகிறார். dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக