திங்கள், 27 ஜனவரி, 2014

பாடகி ஜானகி தூக்கி எறிந்த பத்ம விருதும் கமலஹாசனும்

பத்மபூஷண் பட்டத்துக்கு இனிமேல்தான் தகுதி உள்ளவனாக நான் ஆக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நீங்கள்தானே பார்பனர் ஆயிற்றே அது ஒன்றே போதும் சீக்கிரம் பாரத ரத்னாவும் கிடைத்து விடும்
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:
பல்துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்மபூஷண் பட்டியலில் இடம் பெற்றதை எனக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன். அரசுக்கு நன்றி. தேர்வாளர்களுக்கு நன்றி.
இந்த பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது. நன்றி இந்தியாவிற்கு. நன்றி அன்பிற்கு என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் விருதுகள் எல்லாமே முதலில் அவாளுக்குத்தான்  என்பது தெரிந்ததே ,அண்மையில் பாடகி ஜானகி அவர்கள் மேற்கண்ட  பத்மவிருதை புறக்கணித்து சாதாரண மக்களின் மனதில் ஒரு நேர்மையான கலைஞராக  இடம் பெற்றுவிட்டார் !பார்பனர்கள் அப்படி இல்லையே ? அடிக்கடி முற்போக்கு கலர் காட்டும் கமலஹாசன் தனது திரைப்படங்களில் பார்பனர்களை உயர்த்தி பிடிப்பது ஒன்றும் பெரிய ரகசியம் அல்லவே ?




வாழ்க்கைக் குறிப்பு: 1954-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன், தமிழ்த் திரையுலகில் 1960-ஆம் ஆண்டில் வெளிவந்த "களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
சிறந்த பிற மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றில் நடித்த பெருமையைப் பெற்றவர் கமல்ஹாசன்.
நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர்,  பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார்.
இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக ஏற்கெனவே இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய நடிகர்களில் மிகச்சிலரில் ஒருவராக கமல் உள்ளா   dinamani.com/

கருத்துகள் இல்லை: