செவ்வாய், 28 ஜனவரி, 2014

ப.சிதம்பரம் :இந்தியாவுக்குள் தங்கம் கடத்தல் மாதம் 3 டன்!


இந்தியாவுக்குள் திருட்டுத்தனமாக கடத்தி வரப்படும் தங்கத்தின் அளவு, சில மாதங்களில் 3 டன் (3,000 கிலோ) அளவில் இருந்தது, என்பதை ஒப்புக் கொண்டுள்ளார், மத்திய நிதியமைச்சர், ப.சிதம்பரம். டில்லியில் நேற்று கஸ்ட்டம்ஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டபோதே, இதை ஒப்புக்கொண்டார் அவர்.
சமீபகாலமாக தங்கம் இறக்குமதி செய்வது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள கடுமையான சட்டதிட்டங்கள், மற்றும், தங்க இயக்குமதிக்கான சுங்கவரி அதிகரிப்பு ஆகியவையே, திருட்டுத்தனமாக கடத்தி வரப்படும் தங்கத்தின் அளவு அதிகரத்ததன் காரணம் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
சமீபத்தில்தான் தங்க இறக்குமதிக்கான சுங்கவரி, 10 சதவீதத்துக்கு அதிகரிக்கப்பட்டது. அத்துடன், இந்திய ரிசர்வ் பேங்க், தங்கம் இறக்குமதி செய்வது தொடர்பாக பலவிட கடும் சட்டதிட்டங்களை கொண்டுவந்து, தங்கம் இறக்குமதி கிட்டத்தட்ட முடியாத காரியம் என்ற நிலையை ஏற்படுத்தியது.

தற்போது இந்திய தரை எல்லைப்பகுதிகள், துறைமுகங்கள், மற்றும் விமான நிலையங்கள் ஊடாக முன்னெப்போதும் இல்லாத அளவில் தங்கம் கடத்தப்படுகிறது என்ற தகவலையும், நிதியமைச்சர் சிதம்பரம் ஏற்றுக்கொண்டார்.
தங்க கடத்தலை குறைப்பதற்காக, தங்கம் மீதான வரிவிதிப்பு குறைக்கப்படுமா?
“வரும் மார்ச் மாதம்வரை அதற்கு வாய்ப்பு இல்லை” என கூறியுள்ள அமைச்சர் சிதம்பரம், “அதன்பின் பார்க்கலாம்” என்றார்.
‘அதன்பின் பார்ப்பதற்கு
viruvirupu.com

கருத்துகள் இல்லை: