வியாழன், 14 பிப்ரவரி, 2013

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் கருணை மனுக்கள் நிராகரிப்பு

சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் கூட்டாளிகள் ,  1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேட்டூர் அருகே பாலாற்றில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் கர்நாடக போலீசார் உள்பட 21 பேர் இறந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளை விசாரித்த மைசூர் தடா கோர்ட், மாதையன், பெலவேந்திரன், ஞானப்பிரகாசம் மற்றும் சைமன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அப்போது, மாதையன், பெலவேந்திரன், ஞானப்பிரகாசம் மற்றும் சைமன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை தூக்குத் தண்டனையாக உயர்த்தி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தூக்குத்தண்டனை பெற்ற 4 பேரும் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அவர்கள் 4 பேரும் தங்களின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பியிருந்தனர் நீண்ட நாட்களாக பரிசீலனையில் இருந்து வந்த இந்த கருணை மனுக்கள் இப்போது ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. >இதனால் மாதையன், பெலவேந்திரன், ஞானப்பிரகாசம் மற்றும் சைமன் ஆகிய 4 பேரும் விரைவில் தூக்கிலிடப்படலாம் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: