ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

2 மாணவிகள் கட்டிப் பிடித்தபடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பெங்களூர் அருகே கட்டிப் பிடித்தபடி ரயில் முன்பு பாய்ந்து கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே அனேகல் என்ற இடத்தில் நேற்று மாலை குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டிப் பிடித்தபடி 2 இளம்பெண்கள் ரயில் முன்பு பாய்ந்தனர். இதில் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இளம்பெண்கள் இருவரும் பன்னர்கட்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகளாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் பெயர், விவரங்கள் குறித்தும் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் கூறுகையில், ‘‘அனேகல் அருகே சென்று ரயில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென 2 இளம்பெண்கள் கட்டிப் பிடித்தபடி ரயில் முன்பு வந்து நின்றனர். அவர்களை பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். 120 கிமீ வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்ததால் சடன் பிரேக் போடுவது இயலாத காரியம். என் கண் முன்னாலேயே இருவரும் அடிபட்டு இறந்தனர்’’ என்றார். இதேபோல ஜலஹள்ளி என்ற இடத்தில் 65 வயது முதியவர் ஒருவரும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை அடையாளம் காணும் பணியும் நடந்து வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: