வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

படித்தவர் கள்கூட ஜாதியைப் பார்த்தே வாக்களிக் கின்றனர்

 இந் தியாவில் படித்தவர் கள்கூட ஜாதியைப் பார்த்தே வாக்களிக் கின்றனர் என்று பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தி யாவின் தலைவரும், உச்சநீதிமன்ற முன் னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
கட்ஜு உரை
டில்லியில் வோட் ஃபார் இந்தியா என்ற வாக்காளர் விழிப் புணர்வு அமைப்பின் சார்பில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது:
வாக்களிக்கச் செல் லும்போது, வேட்பா ளர்களின் தகுதியை ஆராயாமல் ஜாதி அடிப்படையிலேயே 90 சதவிகித வாக்கா ளர்கள் வாக்களிக்கின் றனர். படிக்காதவர்கள் மட்டுமின்றி, படித்த வர்களும் இப்படித் தான் இருக்கின்றனர். பேராசிரியர்களும், வழக்குரைஞர்களும்கூட ஜாதி அடிப்படையில் தான் வாக்களிக்கிறார் கள். நாடு அந்த அள வுக்குப் பின்தங்கி உள்ளது.
மக்கள் தங்கள் ஜாதிக்காரர் என்று கருதி வாக்களித்ததா லேயே குற்றப் பின் னணி உள்ள பலரும் தேர்தலில் வென்றுள் ளனர்.
ஜனநாயகம் என்பது தொழில்துறை சார்ந்த சமூகத்தின் பணியா கும். இது பண்ணை யார் முறை நிலவும் விவசாயச் சமூகத்தின் பண்பு அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 வரை இந்தியாவும் பண்ணையார் முறை கொண்ட விவசாயச் சமூகமாகவே இருந் தது. இந்தியாவைத் தொழில்மயமாக்காமல் வைத்திருக்கவேண்டும் என்பதே ஆங்கிலே யரின் கொள்கையாக இருந்தது.
நாடு விடுதலை பெற்றபோது, நமது முன்னோர்கள் மேற்கத் திய பாணியிலான அரசியல் சாசனத்தை உருவாக்கினர். பின் தங்கிய நிலையில் இருந்தும், ஆண்டான் - அடிமை சித்தாந்தத் தில் இருந்தும் சமூ கத்தை உயர்த்துவது, அதை நவீன தொழில் யுகத்துக்கு அழைத்துச் செல்வதுமே அவர் களது நோக்கம். இத னால் தொழிற்சாலை கள் அமைந்து, நாடு முன்னேறியது. ஆனால், இடையில் பரம்பரைச் சக்திகள் தலைதூக்கியதன் விளைவாக மக்கள் ஜாதி அடிப்படையில் வாக்களிக்கத் தொடங் கினர் என்றார் கட்ஜு.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களவை துணைத் தலைவர் கரியமுண்டா உரை யாற்றுகையில்,
நாட்டில் படித்த வர்கள் உள்பட கணிச மான மக்கள் வாக் களிக்கச் செல்வதே இல்லை. வாக்களிப்ப தால் என்ன பயன் என்று பலரும் நினைக் கிறார்கள். ஒவ்வொரு வரும் இதேபோல் சிந் தித்தால், வாக்குப் பதிவே நடக்காது என்று சுட்டிக்காட்டி னார்.

கருத்துகள் இல்லை: