புதன், 13 பிப்ரவரி, 2013

Ex President Nasheed இந்திய தூதரகத்தில் மாலத்தீவு மாஜி அதிபர் தஞ்சம்?

மாலே: மாலத்தீவு கோர்ட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அந்நாட்டு முன்னாள் அதிபர் முகமது நஷீத், இந்திய தூதரகத்தில் தற்போது உள்ளார். அவர் தஞ்சம் எதுவும் கேட்கவில்லை என தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாலத்தீவு கிரிமினல் கோர்ட் தலைமை நீதிபதி அப்துல்லா முகமதுவை, சட்டவிரோதமாக பதவி நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தற்போது மாலத்தீவு கோர்ட் ஒன்றில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் முன்னாள் அதிபர் நஷீத் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி நடந்த விசாரணையில் நஷீத் ஆஜராக வில்லை. இதையடுத்து அவர் மீது இன்று கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தன் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட செய்தியை அறிந்த நஷீத், இந்திய தூதரகத்திற்கு விரைந்து சென்றார். அங்கு அவர் இந்திய தூதர் முலேவை சந்தித்துப் பேசினார். எனினும் அவர் இந்திய அரசிடம் தஞ்சம் கோரவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் கூறுகையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத், இந்திய தூதர் முலேவை சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகவும், ஆனால் முலே இந்தியா சென்று விட்டு இன்று காலை தான் மாலே திரும்பியதாகவும் தெரிவித்தனர். நஷீத் தஞ்சம் எதுவும் கோரவில்லை என்றும், தன் மீதான கைது வாரண்ட்டுக்கு எதிராக தடை உத்தரவு வாங்க அவர் முயன்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய தூதரகத்தில் மாலத்தீவு முன்னாள் அதிபர் உள்ளதையடுத்து அந்த பகுதியை கலவர தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. கோர்ட் அனுமதியுடன் இந்தியா வந்த நஷீத்தின் விசா கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. எனினும் அவர் பிப்ரவரி 11ம் தேதி தான் இந்தியாவை விட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.dinamalar.com

கருத்துகள் இல்லை: