புதன், 13 பிப்ரவரி, 2013

35 கோடி வருமான வரி பாக்கி விவகாரம் : ராம்தேவ் வங்கி கணக்கு முடக்கம்

யோகா குரு ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி யோகாபீத் அறக்கட்டளையின் 11 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த மாதம் முடக்கியது. இதனை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி யோகாபீத் அறக்கட்டளை பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் லேகியங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. வர்த்தக நோக்கில் செயல்படும் அறக்கட்டளை வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அறக்கட்டளையின் 2009ம் ஆண்டுக்கான வரவு செலவுகளை மதிப்பீடு செய்து ரூ.35 கோடி அளவுக்கு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. முதல் தவணையாக ரூ.75 லட்சம் செலுத்த வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது இதை செலுத்த தவறிய காரணத்தால் ராம்தேவ் அறக்கட்டளைக்கு சொந்தமான 11 வங்கி கணக்குகளை கடந்த மாதம் 14ம் தேதி வருமானவரித்துறை முடக்கியது.
இதை எதிர்த்து ராம்தேவ் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், தான் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், அறக்கட்டளைகள் வரி செலுத்த தே¬¬யில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை ஐகோர்ட் நேற்று விசாரித்து, வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அறக்கட்டளைக்கு வரி விதிக்க கூடாது என்ற கோரிக்கை குறித்து வருமானவரித்துறை மார்ச் 31க்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.  tamilmurasu.org

கருத்துகள் இல்லை: