

பெங்களூர்: "தமது அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிளார்க்கு இருக்கிற
தகுதிகூட இல்லாத ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான வேட்பாளரா" என்று மூத்த
பாஜக தலைவரும் பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மிகக் கடுமையாக
விமர்சித்துள்ளார்.பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய
ராம்ஜெத்மலானி, காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை பிரதமர்
வேட்பாளர் என்கின்றனர்.. அந்தப் பதவியில் உட்காருவதற்கு அதற்கு அவருக்கு
தகுதி இருக்கிறதா என்ன? என் அலுவலகத்தில் கடைநிலை பதவியான கிளார்க்
பொறுப்பில் இருக்கக் கூடியவருக்கு உள்ள தகுதி கூட ராகுலுக்கு இல்லையே
என்றும் கடுமையாக சாடியுள்ளார்.மேலும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை
மிகக் கடுமையாக விமர்சித்த ஜெத்மலானி, சுவிஸ் வங்கியில் பணத்தைப்
பதுக்கியவர்கள் பட்டியலை குறிப்பிட்ட நாடுகள் கொடுத்த போதும் மத்திய அரசு
ஏன் வெளியிடாமல் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக