தலைநகர் சென்னையில் பா.ம.க. நிறுவனரே ஆர்ப்பாட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று ஆரம்பத்தில் திட்டம் இருந்தாலும், சென்னை மக்களுக்கு பா.ம.க.-வின் கொள்கைகள் புரிவதில் ‘டியூப் லைட்டாக’ இருப்பார்கள் என்று டாக்டர் ஐயா கருதியதால், அவர் சென்னையில் கலந்து கொள்ளாமல் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
மாண்புமிகு அண்ணன் காடுவெட்டி குரு
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பெரிய ஐயா வராவிட்டால், சின்ன ஐயா வருவார் என்ற எதிர்பார்ப்பு ஒன்று பா.ம.க.-வினரிடையே இருந்தது. ஆனால், சென்னைக்கு வருமளவுக்கு சின்ன ஐயா விபரமில்லாத ஆளா? ஏற்கனவே சென்னையில் சில தினங்களுக்கு முன், இதே இடத்தில், உர விலையை கண்டித்து சின்ன ஐயா ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த வந்திருந்தார்.
அந்த ஆர்ப்பாட்டத்துக்கு வெறும் 200 பேரே தலையைக் காட்டியதில் வெறுத்துப்போன அவர், ஓசைப்படாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருந்தார்.
இப்படியான நிலையில் உரத்துக்கு ஏற்பட்ட கதிதான் பாலுக்கும், பஸ் டிக்கெட்டுக்கும் ஏற்படும் என்பதை தனது புத்திக்கூர்மையால் புரிந்து கொண்ட அன்புமணி ஐயா அவர்கள், தானும் சென்னைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, திருவள்ளூரில் கூட்டம் திரளும் என எதிர்பார்த்து, அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அங்கு, சென்னையில் அவருக்கு கூடிய கூட்டத்தைவிட அதிக கூட்டம் கூடியது உண்மை. சுமார் 300 பேர் வந்திருந்தனர்.
பா.ம.க.-வின் பெரிய ஐயா, சின்ன ஐயா-வின் நிலைமைகள் இப்படியாக, பெரிய அண்ணன் காடுவெட்டி குருவின் கதி என்னாச்சு? அவர் பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு டபுள் செஞ்சுரி அடித்தே விட்டார்! ஆம், அங்கு 200 பேர் வந்திருந்தனர்.
பொதுவாகவே தேர்தலில் தோல்வியடையும்போது, எத்தனை இடத்தில் ஜெயித்தோம் என்பதை சொல்லாமல், எந்தெந்த இடத்தில் எத்தனை சதவீதம் ஓட்டு வாங்கினோம் என்று சொல்வது டாக்டர் ஐயாவின் வழக்கம். இம்முறை அவருக்கு சிரமம் கொடுக்க கூடாது என்று நாம சதவீத கணக்கை கால்குலேட் பண்ணி தயாராக வைத்திருக்கிறோம். இதோ பாருங்கள் எமது கால்குலேஷனை-
பா.ம.க.-வில் ராமதாசுக்கு உள்ள ஆதரவின் (500 பேர்) 40.0 சதவீதமும், அன்புமணிக்கு உள்ள ஆதரவின் (300 பேர்) 66.6 சதவீதமும், அண்ணன் காடுவெட்டி குருவுக்கு (200 பேர்) உள்ளது!
அன்புமணிக்கு உள்ள ஆதரவின் பாதிக்கு மேல் வளர்ந்து விட்டாரே என்று, காடுவெட்டி அண்ணனை கட்சியை விட்டு வெட்டி விடாதீங்க பெரிய ஐயா! பிளீஸ்.. பிளீஸ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக