சனி, 26 நவம்பர், 2011

நிதி மோசடி, ஏமாற்று புகார்... கிரண்பேடி மீது உடனடி வழக்கு - டெல்லி நீதிமன்றம் உத்தரவு!!


டெல்லி: தொண்டு நிறுவனத்துக்கு நிதி சேர்த்ததில் பெரும் மோசடி செய்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி மீது புகார் தரப்பட்டுள்ளது.
இந்தப் புகாரில் கிரண் பேடி மீது அடுத்த 24 மணிநேரத்துக்குள் எப்ஐஆர் போட்டு வழக்குப் பதியுமாறு டெல்லிநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
நவஜோதி தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேகரிப்பதில் முறைகேடு செய்தாகவும், தொண்டு நிறுவனம் தந்த சலுகைகளை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை விசாரித்த நீதிமன்றம், 24 மணிநேரத்துக்குள் மோசடி வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையாகப் பேசி வந்தவர் கிரண் பேடி. அன்னா ஹஸாரேயின் இயக்கத்தில் இணைந்து டீம் அன்னா குழுவின் முக்கிய புள்ளியாக திகழ்ந்தார்.ஆனால் சமீப காலங்களில் இவரது பேச்சும் நடவடிக்கைகளும் பெரும் சர்ச்சைகளுக்குள்ளாகின. ஒரு அரசியல்வாதி அளவுக்கு இவர் மீதும் ஊழல், மோசடி மற்றும் வரம்பு மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
அரசு தந்த சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொண்ட கிரண் பேடி, உயர்வகுப்புக்கான முழுத் தொகையையும் ஏமாற்றி பெற்று வந்தது சமீபத்தில் அம்பலமானது.
இதைத் தொடர்ந்து, அவருக்கு விமானப் பயணக் கட்டணம் தந்த தொண்டு நிறுவனங்கள், கிரண்பேடி தங்களிடம் மோசடியாகப் பணம் பெற்றுக் கொண்டார் என குற்றம் சாட்டினர்.
இதைத் தொடர்ந்து பணத்தை திருப்பித் தந்துவிடுவதாகக் கூறிவிட்டார் கிரண்பேடி.
இதற்கு முன்பு, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரில் வருமான வரிச்சலுகைகளை தன் சொந்த லாபத்துக்கு பயன்படுத்திக் கொண்டார் பேடி என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

கருத்துகள் இல்லை: