சனி, 28 ஆகஸ்ட், 2010

கண்களினால் மட்டுமல்லாமல் நாக்கினாலும் இனி பார்க்கலாம்

ஆஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் 'பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ்'என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கண்ட்ரோல் யூனிட்டையும்  ஒரு கறுப்புக் கண்ணாடியையும் அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லாலிபாப் இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( டிஜிடல் வீடியோ கேமரா) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் கேமிராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் கண்ட்ரோல் யூனிட்டிற்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு மொபைல் போனன்அளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாக்கின்ன் மேல் வைக்கப் படும் லாலிபாப் வடிவ உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கருத்துகள் இல்லை: