வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

புலிகளுக்கு ஏன் மற்றவர்கள் எதிரிகளாகத் தெரிந்தார்கள்.

teavadai
புலிகளுக்கு ஏன் மற்றவர்கள் எதிரிகளாகத் தெரிந்தார்கள்.
புலிகள் தமக்கு பிடிக்காதவர்கள், சந்தேகப்பட்டவர்கள், விமர்சனம் செய்தவர்கள் ஒத்துழைக்காதவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் என எல்லோரையும் எதிரிகளாக போட்டுத்தள்ளினார்கள். போட்டுத்தள்ளிவிட்டு பின் அவர்கள் துரொகிகள் என அறிவித்தார்கள்.
புலிகளுக்கு எதிரிகளாக ஏன் இவர்கள் தெரிந்தார்கள் என்பதற்கு மகாபாரதத்தில் நடந்த சம்பவம் ஒன்றை உதாரணமாக காட்டலாம்.
பஞ்ச பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் அனுபவித்தார்கள். அந்தச் சமயம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிருஷ்ணர் நினைத்தார்.உடனே புறப்பட்டுக் காட்டுக்குப் போனார். அவர்களைப் பார்த்தார். ஓரிரவு அவர்களுடன் தங்கினார். அப்பொழுது அவர்கள் அவருக்கு காவல் காத்தார்களாம்.
ஒருவர் மாறி ஒருவர் இரவுக் காவல் காக்க வேண்டும். ஒவ் வொருவரும் கொஞ்சக் கொஞ்ச நேரம் காவல் காப்பார்கள். முத லில் அர்ஜுனன் காவல் காத்தான். எல்லோரும் தூங்கினார் கள். அவன் மட்டும் முழித்துக் கொண்டிருந்தான்.அப்பொழுது எதிரில் ஓர் உருவம் தெரிந்தது. உற்றுப் பார்த் தான். அது ஒரு பூதம். அது பாட்டுக்குக் கொஞ்சத் தூரத்தில் நின்று கொண்டிருந்தது.
இவனுடைய நேரம் முடிந்ததும் அடுத்ததாக நகுலன் வந்தான். அப்பொழுதும் அந்தப் பூதம் கண்ணில்பட்டது. ஆனால் அது முன்பிருந்ததை விட கொஞ்சம் பெரிதாக இருந்தது.இவனுக்கடுத்ததாக சகாதேவன்  பீமன் தருமன் இப்படி மாறி மாறி காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.வரவர அந்தப் பூதத்தின் வடிவம் பெரிதாகிக் கொண்டே இருந்தது. ஒவ்வொருவரும் அதைக் கொல்வதற்கு முயற்சி செய்தார்கள்.
இரவுக்காவல் பணியில் பஞ்சபாண்டவர்கள் இப்படி மாறி மாறி ஈடுபடுவதைப் பார்த்ததும் கிருஷ்ணர் தருமரைப் பார்த்துக் கேட்டார்:“இந்தக் காவல் பணியில் எனக்கும் ஒரு வாய்ப்புத் தரக் கூடாதா? நானும் கொஞ்சநேரம் கண்விழித்துக் காவல் காக்கிறேன்” என்றார். இதற்குத் தருமர் சொன்னார். “செய்யுங்களேன். இந்த உலகத்தைப் பாதுகாப்பதும் நீங்கள்தான். பாண்டவர்களைப் பாதுகாப்பதும் நீங்கள் தான்.இந்தப் பாதுகாவல் பணியிலும் ஈடுபட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதை வேண்டாமென்று சொல்வதற்கு நாங்கள் யார்?”என்றார்.ஒவ்வொருவராக காவல் காத்து முடித்ததும் இப்பொழுது கிருஷ்ணர் வரவேண்டிய முறை. காவலுக்குக் கிருஷ்ணர் புறப்பட்டார்.
இப்பொழுது தருமர் சொன்னார்: கிருஷ்ணா காட்டில் ஒரு பெரிய பூதம் இருக்கிறது. அது வரவரப் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. அது உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுக்கும். அதனால் நீங்கள் போகாமலிருப் பதே நல்லதுஎன்றார். அதற்கு கிருஷ்ணர் சொன்னார். “இப்படி என்மீது உனக்குச் சந்தேகம் வரலாமா? ஏன் இப்படிப்பட்ட சந்தேகம்? அது உன்னுடைய பலவீனம். நான் நிச்சயமாக காவல் பணி செய்யத்தான் போகிறேன்” என்றார். போனார். நள்ளிரவு இரண்டு மணியிலிருந்து 3 மணி வரைக்கும் அவருடைய நேரம். 3 மணிக்கு பின் அர்ஜுனன் வரவேண்டும். அதனால் 3 மணிக்கு அர்ஜுனன் வந்தான்.
கிருஷ்ணர் சிரித்து கொண்டேயிருந்தார். எதிரில் பார்த்தான் பூதத்தையும் காணவில்லை பிசாசையும் காணவில்லை. அர்ஜுனன் கேட்டான்.” கிருஷ்ணா நீ அந்தப் பூதத்தை – அரக்கனை அழித்துவிட்டாயா?” என்றான்.
இப்பொழுது கிருஷ்ணர் சொல்கிறார் அர்ஜுனா நான் எந்தப் பூதத்தையும் பிசாசையும் அழிக்கவில்லை. என்னுடைய கண்ணுக்கு எதுவுமே தெரியவில்லை. எதுவுமே நம்முடைய பிரதி பலிப்புத்தான். நம்முடைய கோபம்தான் நமக்கு முன் அரக்கத்தனமாக காட்சியளிக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளது கோபம் அதிகரிக் கிறதோ … அந்த அளவுக்குச் சமமாக அதுவும் வளர்க்கிறது. எனக்கு யார் மீதும் கோபமோ வெறுப்போ இல்லை.
உண்மையிலேயே நமக்கென்று யாரும் எதிரிகள் கிடையாது. நம்முடைய குணங்கள்தான் நமக்கு எதிரிகள். உள்ளே இருக்கும் உணர்வுகள் தான் நமக்குப் பிரதிபிம்பமாக வெளியே தெரிகிறது. வெறுப்பேயில்லாமல் எல்லாவற்றையும் அன்பால் நிரம்பும் போது நம்முடைய கண் முன்னாடியும் அன்புதான் தெரியும். அரக்கன் தெரியமாட்டான் என்றார்.
இந்த உதாரணக்கதை புலிகளுக்கு சரியாகப் பொருந்துகிறது. அவர்களுடைய குணங்களே அவர்களுக்கு எதிரிகள். அதனால்தான் அவர்கள் யுத்தத்தில் அழிந்துபோனார்கள். ஆனால் சருகுப்புலிகள் இன்னும் புலம்பெயர்நாடுகளில் இருந்து கொண்டு அலப்பறை பண்ணிக் கொண்டு இருக்குதுகள். ஆளக்கொரு இணையத்தளங்களை வைத்துக்கொண்டு எழுதுகிற எழுத்துக்களைப் பார்த்தால் இன்னும் திருந்தவில்லை என்பது தெரிகிறது. முற்றிவிட்ட கான்சர் வியாதிக்காரன் போல் இருப்பதால் வைத்தியத்தாலும் குணப்படுத்தவும் முடியாது. இப்படியே இருந்து புலிவிசர் முத்தி மண்டையைப்போடவேண்டியதுதான். தமிழ்சமூகத்திற்கு மிகப்பெரும் நிம்மதி

கருத்துகள் இல்லை: