வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

இன்றைய தேவை தமிழ் மக்களின் சேவை


 Dr. Rajasinham Narendran,  Ph.D  (Guelph, Ontario  Canada) Saudi  Arabia                 
இன்றைய தேவை தமிழ் மக்களின் சேவைகிட்டத்ட்ட முப்பது வருடங்கள், பல வடிவங்களில் வியாபித்து ஆயுதப் போராட்டம், சென்ற வருடம் இலங்கை இரானுவத்தால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஆயுதப்போராட்டத்துக்கான அடிப்படை காரணங்கள் பற்றி விவாதித்து, நியாயப்படுத்துவதற்கான காலம் இதுவல்ல. இப்  போரின் தாக்குதலால் ஏற்பட்ட விளைவுகளை எதிர் நோக்கி, புத்திசாலித்தனமாக நடப்பதே இக்காலகட்டத்தில் உகந்தது. நாமே நமக்கு எதிரிகளாக மாறக்கூடாது எமது மக்கள், எமது உறவினர்கள், எங்கள் மொழி பேசுபவர்கள், எமது பிரதேசங்களில் வாழ்பவர்கள், தமிழருக்கென்று நடாத்தப்பட்டபோரில் மிகவும் கொடூரமாக பாதிக்கப்பட்டவர்கள், இன்று சீரழிந்து இடம்பெயர்ந்தவர்களாகவும், அகதிகளாகவும், விதவைகளாகவும், ஊனமுற்றோராகவும், அனாதைகளாகவும், கைதிகளாகவும் அல்லற்படுகின்றனர்
இவர்களுக்கு உதவி செய்து கைகொடுப்பது எங்கள் கடமை. ஆயுதப்போராட்டமோ, வேறு எந்த எதிர்பார்ப்போ, எமது மக்களுக்கு வருங்காலங்களில் எவ்வித நன்மையையும் ஏற்படுத்தப்போவதில்லை. நாம் தமிழர் என்ற உணர்ச்சியைத் தவிர்த்து, எமது மக்கள் மனிதர்கள், அவர்களுக்கு, எமக்காக சீரழிந்தவர்களுக்கு, தன்மானமுள்ளவர்களாக வாழும் உரிமை வழங்கப்படவேண்டும் என்ற உணர்ச்சி எம்மிடையே எழவேண்டும். அவர்களுக்கு இருக்க வீடுவேண்டும். உண்ண உணவு வேண்டும், உடுக்க உடைவேண்டும், தொழில்செய்ய வசதி வேண்டும். கல்வி வேண்டும். மருத்துவ வசதி வேண்டும். விதவைகளுக்கும், அனாதைகளுக்கும், ஊணமுற்றோருக்கும் நீண்டகால பராமரிப்பும், உதவியும் வேண்டும். அரசியல் விவாதங்கள் இப்பிரச்சனைகளிற்கு தீர்வு ஏற்படுவதற்கு தடையாகவே இருக்கும்.
இப்பிரச்சனைகளைத் தீர்த்து, எமது மக்களையும், சமுதாயத்தையும் மீண்டும் கட்டியெழுப்பி, 21ஆவது நூற்றாண்டிற்கேற்ப, வளர்ச்சியுடன் நாம் ஓங்கி வாழ வைக்க வேண்டும். இதற்கு உதவிதேவை. கைகொடுக்கும் தெய்வங்கள் தேவை. எம் சமுதாயம், தகுதி வாய்ந்த, காலகட்டத்திற்கேற்ற தலைமையற்ற ஒன்றாக இன்று இயங்குகின்றது. சுயநலமற்ற, தீர்க்கதரிசனமுள்ள, அறிவுள்ள தலைமை தமிழர்களுக்கு, கிட்டத்தட்ட 75-80 வருடகாலமாக இருந்ததில்லை. இதுவே, தமிழர்களிடையே காணப்படும் பெருந் தட்டுப்பாடு. ஓர் நல்ல தலைமை தோன்றுவதற்கு, ஏற்றகாலமிது. மக்களிடையே நல்ல தலைமைக்கான தாகமிருக்கின்றது. நல்ல தலைமைக்கான தேவையிருக்கின்றது. இம்மக்களிற்கு உதவிசெய்து பாடு படுபவர்களிடமிருந்துதான் இத்தலைமை வரவேண்டும்.
இலங்கையரசை எதிர்ப்பதனாலோ, குறைகூறுவதனாலோ நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. இவ் எதிர்ப்பரசியல் தோற்றுவிட்டது. இலங்கையருசுடன், நட்புடனும், சமயோசிதத்துடனும், இணைந்து செயற்படுவதன் மூலமே எம்மை எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளை நாம் தீர்க்கமுடியும். எமக்கு இலங்கையரசின் ஒத்துளைப்பும், ஆதரவும், நம்பிக்கையும் இப்போது தேவை. அதே நேரத்தில் சிங்கள முஸ்லிம் சமூகங்களின் கனிவும், பரோபகாரமும், ஆதரவும் எமக்குத்தேவை. இவற்றை பெறுவதற்கு நாம் அரசாங்கத்தினதும், இச்சமூகங்களினதும் நமபிக்கைக்கு பாத்திரமாகவேண்டும். நம் கையே நமக்கு உதவி, என்ற அடிப்படை உன்மையையும் ஏற்கவேண்டும். ஆகவே தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், எம்மக்களுக்குதவ முன்வர வேண்டும். இவ்வுதவி, இண்றைக்கு நாளைக்கு மட்டுமல்ல, இன்னும் பத்து வருடங்களுக்காவது தேவைப்படும்.
இன்று வட-விழக்கில் வாழும் மக்கள் மிக நலிந்து, பொருளாதார பலமற்ற, சமுதாய அமைப்புக்கள் அழிக்கப்பட்ட, கல்வி – கலாச்சார முறைமைகள் சீரழிந்த சூழலில் வாழ்கின்றனர். தீர்க்க தரிசனமிழந்த ஒரு உரிமைப்போராட்டத்தால்,உள்ளதையும் இழந்து பரிதவிக்கின்றனர். சீர்கெட்டு, நாதியிழந்து, தவிர்க்கும் இச்சமுதாயத்தை எவ்வாறு உயிர்பெறச்செய்வது என்பது இன்னொரு பாரிய போராட்டமே. தமிழராய் வாழ்வதற்குமுன், எம்மக்கள், மனிதராய் வாழவேண்டும். மனிதராய் வாழ்வதற்கு அவர்களது அடிப்படைத் தேவைகள் கவனிக்கப்படவெண்டும். மனிதர் என்ற உணர்ச்சியுடனும், பெருமையுடனும் வாழ்வதற்கு, அவர்களுக்கு உழைக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படவெண்டும். விவசாயம், கால்நடைவழர்ப்பு,கைத்தொழில், மீன்பிடித்தல், போன்றவை மீண்டும் நன்றாய் இயங்கவேண்டும். தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும். தொழிற் பயிற்சிக்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். பணமுதலீடுகளை செய்யப்படவேண்டும். இன்னும் எத்தனையோ செய்யப்படவேண்டிய தேவையும், சந்தர்ப்பங்களுமுள்ளன. இதில் பங்கெடுப்பது ஒவ்வொரு வசதியுடைய, மனிதாபமுடைய தமிழனினதும் கடமை. இதை எக்காரணம்கொண்டும் நாம் உதற முடியாது.
இலங்கை அரசின் அணுசரனையுடனும், திரு.குமரன் பத்மநாதனின் ஈடுபாட்டின் ஊடாகவும் உறவுகளின் புனர்வாழ்வு புனரமைப்பு திட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள (NERDO) இக்காலகட்டத்தின் தேவை.  இவ்வமைப்புக்கு கொடுக்கப்படும் நன்கொடைகள், இலங்கை அரசை சென்றடைகின்றன என்கின்ற தேவையற்ற புலம்பல்களை நம்பவேண்டாம்.  இது நான் எதிர்பார்க்கும் படி இயங்கினால், வட -  கிழக்கு வாழ் மக்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமையும். அரசாங்கத்தின் ஆதரவிற்கும், நம்பிக்கைக்கும்,மேற்பார்வைக்கும் இது உட்பட்டிருப்பது இன்றுள்ள சூழ்நிலையில், இவ்வமைப்பிற்கு ஒரு நல்ல அத்திவாரமாக அமையும். யுத்தம் முடிந்து ஓராண்டு ஆனாலும்,ஆறாப் புண்களும், நீறு பூத்த நெருப்பாக இன்னும் இருக்கும் கோபதாபங்களும், அவநம்பிக்கைகளும் பழைய நிகழ்வுகளை நினைவுறுத்தும் வடுக்களும், இவ்வமைப்பின் இயக்கத்துக்கு தடையாக இருக்கக்கூடாது. இவ்வமைப்பு இன்றைய தேவை. இவ்வமைப்பு இலங்கை அரசாங்கத்தின் உத்தேசங்களையும், தமிழ் மக்களின் ஊக்க – சமயோசிதங்களையும் பரிசோதிக்கும் ஓர் கூடமாக அமையப்பொகின்றது. உங்கள் யாவரினதும் பல்வகையான பங்களிப்பு இப்போது இவ்வமைப்பிற்கு தேவைப்படுகின்றது.
பாரதி கேட்டதுபோல்,
‘‘ நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் !
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் !
அதுவுமற்றவர் வாய்ச்சொல்லருளீர் !
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் . . .
மற்றயோர் தடையாக இராதீர் (எனது)

கருத்துகள் இல்லை: