புதன், 25 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சியில் சுமார் 18000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக

கிளிநொச்சியில் சுமார் 18000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக தேசிய அபிவிருத்தித் தொடர்பான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நோக்கில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன. 4780 வீடுகளை நிர்மாணிப்பதற்கு உலக வங்கி உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டத்தின் அடிப்படையில் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 325000 ரூபா பெறுமதியான வீடுகள் இந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட உள்ளன. இந்தியாவினால் நிர்மாணிக்கப்பட உள்ள 50000 வீடுகளில் 12500 வீடுகள் கிளிநொச்சி மாவட்ட இடம்பெயர் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஹெபிடாட் போன்ற நிறுவனங்களும் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளன.

கருத்துகள் இல்லை: