சனி, 28 ஆகஸ்ட், 2010

துரோகி! இதுவே ஈழவிடுதலைப்போராட்டத்தில் அதிகமாக உச்சரிக்கபட்ட சொல்

காலத்துக்கு காலம் மாறும் துரோகம்
(மோகன்)
துரோகி அல்லது துரோகிகள் இதுவே ஈழவிடுதலைப்போராட்டத்தில் அதிகமாக உச்சரிக்கபட்ட சொல். இதன் அர்த்தம் தேவைக்கு ஏற்ப மாறியது அல்லது மாற்றியமைக்கபட்டது.  'கொலைவெறி மன உளைச்சல்' வியாதியால் பீடிக்கபட்ட ஒரு தலைவனின் வியாதியில் விளைந்த எண்ணற்ற கொலைகளுக்கு வியாக்கியானமாக அழைக்கபட தொடங்கிய சொல் இந்த 'துரோகி'. தலைவனின் நேரடிப் பரப்புதால் வீரியமாய் பரவிய இந்த நோயினால் பாதிக்கபட்டவர்களால் இலங்கை தீவு முழுவதும் துரோகிகளாய் மடிந்து விழுந்து கொண்டிருந்தனர். படிப்படியாக விபச்சார ஊடகங்கள் என்னும் நோய் காவிகள் மூலம் புலம் பெயர் நாடுகளில் பரவத்தொடங்கியது. இந்த நோய் கடல் கடந்து பரவியதால் என்னவோ தன் வீரியத்தை இழந்து 'கொலையின்பம் மன உளைச்சல்' நோயாக மனிதர்களைப்போன்றவர்களிடம் மண்டியிட்டது. இந்த நோய் பற்றிக்கொண்டவர்களை அமைதியடையசெய்யும் ஒரே மருந்து இந்த நோயினால் பாதிக்கபடாதவர்களின் மரணங்களே! இப்படிப்பட்ட மரணங்கள் நிகழும் போதெல்லாம் 'துரோகி ஒழிந்தான்' என வாய் ஓயும் வரை உச்சரித்து சாந்தியடையும். மேலும் சிதுறுண்ட உடல்களின் படங்களை பார்த்துவிட்டாலோ பரம திருப்தியாய் தூங்கி போய் விடுவார்கள்.
தனிமனிதனாய் கொல்லப்படும் போது துரோகியாகவும், ஒட்டு மொத்தமாய் கொல்லப்படும் போது ஒட்டுக்குழுக்களாகவோ, துரோகக்குழக்களாகவோ பிரகனப்படுத்தப்பட்டது. அதிபர் ஆனந்தராஜா ஆமியிடம் கை குலுக்கியது…. அது துரோகத்தனம். மரணிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் அதே ஆமிக்காரர்களின் ஆசீர்வாதத்துடன் மாற்று இயக்கக்காரன்களை அழிக்கும் போது அது போராட்டமாய் புனிதப்படுத்தப்பட்டது. இப்படித்தான் துரோகங்களுக்கு அர்த்தங்கள் மாற்றியமைக்கப்பட்டது. வெலிக்கடை படுகொலைகள் வெறியாட்டம். ஆனால் கிட்டுவின் ஒற்றைக்காலுக்கு கந்தன்கருணை படுகொலைகள் பரிகாரம். ஏனெனின் கொல்லப்பட்டவர்கள் துரோகிகள். இதன் உச்சக்கட்டமாய் அறிவாய் சிந்திப்பவர்கள், ஆக்கபூர்வமாய் செயல்படுபவர்கள், ஏன் மனிதநேயம் கொண்ட மனிதர்களெல்லாம் இந்த நோய் பிடித்தவர்களுக்கு துரோகியாய் தென்படத்தொடங்கினார்கள். புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களால் தங்கள் வீரியத்திற்கு ஏற்ற விளைவை விதம்விதமாய் விளைவிக்க முடிந்தது.

புலம் பெயர்ந்த நாடுகளில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்வதறியாது தவிக்கத்தொடங்கினர். தினம் தினம் துரோகிகளின் சாவுகளை பார்த்து தங்களுக்குள் அமைதியும் உற்சாகமும் அடைந்து சாந்திமயப்பட்டவர்களுக்கு அந்த துரோகிகள் நிம்மதியாக உயிர் அச்சமின்றி வாழ்ந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது இவர்களை பீடித்த நோயினால் இவர்களுக்கு பல பக்க விளைவுகள் ஏற்படத் தொடங்கியது'துரோகி அழிந்தான்' என முணுமுணுத்த வாய்களுக்கு மென்று துலைக்க வேறு எந்த வார்த்தைகளும் அகப்படாமல் போயிற்று.

for details please visit this page:sooddram.com

கருத்துகள் இல்லை: