திங்கள், 15 ஜனவரி, 2024

இலங்கை கடற்­படைக் கப்­பல் செங்கடல் பாதுகாப்பு பணியில் ரணில் விக்கிரமசிங்க அதிரடி

வீரகேசரி - சுபத்ரா : இலங்கைக் கடற்­படைக் கப்­பலை செங்­க­ட­லுக்கு அனுப்பும், அர­சாங்­கத்தின் முடிவு, வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்­திலும் இந்த விவ­காரம் எதி­ரொ­லித்­தது. அதற்கு வெளி­யேயும், இந்த முடி­வுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்­பி­யி­ருக்­கி­றது.
ஆனால் அர­சாங்­கமோ தமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கி­றது.
கடந்த 3ஆம் திகதி கொழும்பில் நடந்த விழா ஒன்றில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஹெளதி படை­களின் தாக்­கு­தல்­களில் இருந்து வணிக கப்­பல்­களைப் பாது­காப்­ப­தற்­காக, செங்­க­ட­லுக்கு கடற்­படைக் கப்பல் ஒன்றை அனுப்­பு­வ­தற்கு அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­தி­ருப்­ப­தாக திடீர் அறி­விப்பை வெளி­யிட்­டி­ருந்தார்.
காஸா மோதல்கள் வெடித்த பின்னர், மத்­திய கிழக்கு மாத்­தி­ர­மன்றி, செங்­கடல் பிராந்­தி­யமும் அமை­தியை இழந்­துள்­ளது.

பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ஆத­ர­வாக, யேமனில் உள்ள ஹெளதி படை­யி­னரும் இஸ்­ரே­லுக்கு எதி­ராக ஏவு­கணைத் தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருந்­தனர்.
செங்­கடல் வழி­யாகச் செல்லும், இஸ்­ரே­லுடன் தொடர்­பு­டைய கப்­பல்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் என்றும் ஹெளதி படை­யினர் எச்­ச­ரித்­தனர்.
ஈரான் ஆத­ரவு பெற்ற ஹெளதி படை­யி­ன­ரிடம் அதி­ந­வீன ஏவு­க­ணை­களும், ஆளில்லா விமா­னங்­களும் இருப்­பது, செங்­கடல் கப்பல் போக்­கு­வ­ரத்­துக்கு பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­யி­ருக்­கி­றது.

சுயெஸ் கால்வாய் வழி­யாக பயணம் செய்யும் கப்­பல்கள், செங்­கடல் வழி­யாக செல்ல வேண்­டி­யது தவிர்க்க முடி­யா­தது.

செங்­க­ட­லையும், ஏடன் வளை­குடா மற்றும் அரபிக் கட­லையும் இணைக்­கின்ற 20 கடல் மைல் மட்­டுமே அகலம் கொண்ட பாப் அல் மன்டாப் நீரி­ணையைக் கடந்து செல்ல வேண்டும்.

இந்த நீரிணை ஒரு பக்கம் ஜிபுட்டி மற்றும் எரித்­ரி­யா­வையும், மறு­பக்கம் யேம­னையும் தரை எல்­லை­க­ளாக கொண்­டி­ருக்­கி­றது.
ஜிபுட்­டியில் அமெ­ரிக்கா, சீனா போன்ற நாடு­களின் கடற்­படைத் தளங்கள் இருந்­தாலும், ஹெளதி படை­களின் கட்­டுப்­பாட்டில் யேமன் இருப்­பதால், இந்த வழி­யான கப்பல் போக்­கு­வ­ரத்து பெரும் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

இதனால், செங்­கடல் வழி­யாக பய­ணித்த வணிக கப்­பல்கள், தாக்­குதல் அபா­யத்தை எதிர்­கொள்ள வேண்டும் அல்­லது மாற்று வழி­யான தென் ஆபி­ரிக்­காவைச் சுற்றி- நன்­னம்­பிக்கை முனை வழி­யாக செல்ல வேண்டும்.

பல கப்பல் நிறு­வ­னங்கள் இந்த மாற்றுப் பாதையை தெரிவு செய்­தி­ருக்­கின்­றன. இதனால், கிட்­டத்­தட்ட 3500 கடல் மைல்கள், கூடுதல் தூரம் பய­ணிக்க வேண்டும். இதற்கு குறைந்­த­பட்சம் 10 நாட்கள் அதி­க­மாகத் தேவைப்­படும்.

இவ்­வா­றான நிலையில், சர்­வ­தேச கப்பல் போக்­கு­வ­ரத்து ஆபத்­துக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது. செங்­க­டலில் ஆபத்தை எதிர்­கொள்­வ­தா­னாலும் சரி, ஆபத்தில் இருந்து தப்­பிக்க மாற்றுப் பாதையை தெரிவு செய்­வ­தாலும் சரி, பொரு­ளா­தார இழப்­புக்­களை எதிர்­கொண்டு தான் ஆக வேண்டும்.

ஹெளதி படை­யி­னரின் தாக்­கு­த­லுக்கு உள்­ளானால், ஏற்­படக் கூடிய இழப்­புகள் ஒரு­பு­றத்தில் இருக்க, தாக்­கு­தலில் இருந்து தப்பிப் பய­ணித்தால் கூட, இழப்பு இருக்­கி­றது.

செங்­கடல் வழி­யாக பய­ணிக்கும் கப்­பல்கள், அதி­க­ளவு காப்­பு­றுதிக் கட்­ட­ணத்தைச் செலுத்த வேண்­டி­யி­ருக்கும். அதனால் கப்பல் கட்­ட­ணங்கள் அதி­க­ரிக்கும்.

போர்க்­கா­லத்தில் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வரும் கப்­பல்கள், இவ்­வா­றான அதி­க­ளவு காப்­பு­றுதிக் கட்­ட­ணங்­களைச் செலுத்த வேண்­டிய நிலை காணப்­பட்­டது நினை­வி­ருக்­கலாம்.

அதே­போல, மாற்றுப் பாதையில் தென் ஆபி­ரிக்­காவைச் சுற்றி, அதா­வது 3,500 கடல் மைல்கள் கூடுதல் தூரத்­துக்குப் பயணம் செய்யும் கப்­பல்­க­ளுக்கும் கட்­டணம் அதி­க­ரிக்கும்.

ஆக, செங்­கடல் பிராந்­தி­யத்தில் அமைதி ஏற்­ப­டுத்­தப்­படும் வரை, கப்பல் கட்­ட­ணங்­களை குறைக்க முடி­யாது.
கப்பல் கட்­ட­ணங்­களின் அதி­க­ரிப்பு, சர்­வ­தேச அளவில் பொருட்­களின் விலை­களை அதி­க­ரிக்கச் செய்­வ­துடன், நாடு­களின் பொரு­ளா­தா­ரங்­க­ளிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு தான், செங்­க­ட­லுக்கு கடற்­படைக் கப்பல் ஒன்றை அனுப்­பு­வ­தற்கு அர­சாங்கம் முடிவு செய்­தி­ருக்­கி­றது.ரணில் விக்கிர­ம­சிங்க அர­சாங்­கத்தின் இந்த முடிவு தன்­னிச்­சை­யாக எடுக்­கப்­பட்­ட­தல்ல. இதற்குப் பின்னால் அமெ­ரிக்­காவே இருக்­கி­றது.

செங்­க­டலில் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான ஒரு கடல்சார் கூட்டுப் படை இயங்­கு­கி­றது. அது செங்­கடல் வழி­யாக பயணம் செய்யும் வணிக கப்­பல்­களை ஹெளதி படை­யி­ன­ரிடம் இருந்து பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கி­றது.

ஹெளதி படை­யி­னரின் ஏவு­கணை மற்றும், ஆளில்லா விமா­னங்­களின் தாக்­கு­தல்­களை தடுக்­கின்ற வச­தி­களை அமெ­ரிக்கா கொண்­டி­ருக்­கி­றது.

ஆனால், ஹெளதி படை­யினர் அவ்­வப்­போது சிறிய பட­கு­களில் சென்று வணிக கப்­பல்­களை தாக்­கு­கின்­றனர். கைப்­பற்­று­கின்­றனர்.

அதனை தடுப்­ப­தற்கு வெறு­மனே தொழில்­நுட்ப வச­திகள் மாத்­திரம் போதாது, கடற்­படைக் கப்­பல்­களும், படை­யி­னரும் அவ­சியம்.

இந்த அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்­வ­தற்கு அமெ­ரிக்கா வேறு நாடு­களின் கடற்­ப­டை­க­ளையும் இணைத்துக் கொள்ளும் முயற்­சியில் இறங்­கி­யி­ருக்­கி­றது.

அவ்­வாறு தான் இலங்­கை­யி­டமும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. இலங்கை அர­சாங்கம் வேறு வழி­யின்றி செங்­க­ட­லுக்கு கப்­பலை அனுப்ப இணங்­கி­யி­ருக்­கி­றது.

ஒரு கப்­பலை செங்­க­ட­லுக்கு அனுப்­பினால், இரண்டு வாரங்­க­ளுக்கு 250 மில்­லியன் ரூபா செலவு ஏற்­படும் என்று ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே கூறி­யி­ருந்தார்.

ஆனாலும் சர்­வ­தேச கடல் வழிப் பாதையை பாது­காப்­ப­தற்கு இது அவ­சி­ய­மா­னது என்று அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

நாடு பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­கி­யுள்ள நிலையில், இரண்டு வாரங்­க­ளுக்கு 250 மில்­லியன் ரூபாவை செல­விட்டு, செங்­க­ட­லுக்கு கடற்­படைக் கப்­பலை அனுப்­பு­வதால் என்ன பயன் என்று எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

அதே­வேளை, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம், இலங்கை அணி­சேரா நாடா அல்­லது அமெ­ரிக்க கூட்­டணி நாடா என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

செங்­க­ட­லுக்கு கடற்­ப­டையை அனுப்பும் முடிவு அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச அளவில் சில பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

பலஸ்­தீன –-இஸ்ரேல் போரில், இஸ்­ரே­லுக்கு சாத­க­மான நிலைப்­பாட்டை அர­சாங்கம் எடுக்­கி­றதா என்ற கேள்­வியை எழுப்­பி­யி­ருக்­கி­றது.இந்த சந்­தேகம், இஸ்­லா­மிய நாடுகள் மத்­தியில் அதி­ருப்­தியை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

இதனால் கடந்த வியா­ழக்­கி­ழமை மத்­திய கிழக்கில் உள்ள 10 இஸ்­லா­மிய நாடு­களின் தூது­வர்­களை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்துப் பேசி­யி­ருக்­கிறார்.

இதன்­போது இஸ்ரேல் –- பலஸ்­தீன பிரச்­சி­னையில், இரு தேசக் கொள்கை என்ற நிலைப்­பாட்டில் எந்த மாற்­றமும் இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, சர்­வ­தேச கப்பல் போக்­கு­வ­ரத்து பாதையின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கைக்கு பொறுப்பு உள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

செங்­க­டலில் வணிக கப்­பல்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்­தலால், பொருட்­களின் விலைகள் அதி­க­ரிக்கும் ஆபத்து இருப்­ப­தா­கவும், இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு பாதிப்பு ஏற்­படும் என்றும், அர­சாங்கம் ஆரம்­பத்தில் கூறி­யது.

ஆனால், செங்­கடல் கப்பல் போக்­கு­வ­ரத்­துக்கு தோன்­றி­யுள்ள அச்­சு­றுத்தல் இலங்­கைக்கு சில சாத­க­மான விளை­வு­க­ளையும் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

அதில் ஒன்று, கொழும்பு துறை­மு­கத்தின் ஊடாக கப்­பல்­க­ளுக்கு பரி­மாற்றம் செய்­யப்­ப­டு­கின்ற கொள்­க­லன்­களின் எண்­ணிக்கை சடு­தி­யாக 80 சத­வீ­தத்­தினால் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

கொழும்பு துறை­மு­கத்தில் 30 சத­வீத கொள்­க­லன்­களை கையாளும், ஜயா மற்றும் கிழக்கு கொள்­கலன் முனையம் ஆகி­ய­வற்றின் ஊடாக முன்னர், நாளொன்­றுக்கு 5,000 தொடக்கம் 6,000 வரை­யான கொள்­க­லன்கள் கையா­ளப்­பட்­ட­தா­கவும் தற்­போது, அந்த எண்­ணிக்கை, 8,000 தொடக்கம் 9,000 வரை அதி­க­ரித்­துள்­ள­தா­கவும், இலங்கை துறை­முக அதி­கா­ர­ச­பையின் தலைவர் கீத் பேனாட் தெரி­வித்­துள்ளார்.இதனால் கொழும்பு துறை­மு­கத்தின் வரு­மானம் கணி­ச­மாக அதி­க­ரிக்கும்.

எனவே செங்­க­டலில் கப்­பல்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் இலங்­கைக்கு முற்­றிலும் பாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது எனக் கூற முடி­யாது.

செங்­க­ட­லுக்கு கடற்­படைக் கப்­பலை அனுப்பும் முடிவைக் கூட அர­சாங்கம் ஒரு நிர்ப்­பந்­தத்தின் பேரில் தான் எடுக்­கி­றது.

செங்­க­ட­லுக்கு 100 வரை­யான படை­யி­ன­ருடன் கப்­பலை அனுப்பத் தயா­ராக இருப்­ப­தா­கவும், அர­சாங்­கத்தின் உத்­த­ர­வுக்­காக காத்­தி­ருப்­ப­தா­கவும், கடற்­படைப் பேச்­சாளர் கூறி­யி­ருக்­கிறார்.

ஆனால், கடற்­ப­டையின் எந்தக் கப்பல் செங்­க­ட­லுக்கு அனுப்­பப்­ப­ட­வுள்­ளது என்ற கேள்­விக்கு அவர் பதி­ல­ளிக்­க­வில்லை.

இலங்கை கடற்­ப­டை­யிடம் ஆழ்­க­டலில் பயன்­ப­டுத்தக் கூடிய குறைந்­தது, 8 போர்க்­கப்­பல்கள் இருக்­கின்­றன.

அவற்றில், சீனா வழங்­கிய பராக்­கி­ர­ம­பாகு போர்க்­கப்­ப­லையோ, இந்­தியா வழங்­கிய சயு­ரால, சிந்­து­ரால, சாகர மற்றும் சயுர போன்ற ஆழ்­கடல் கண்­கா­ணிப்பு கப்­பல்­க­ளையோ, இந்தப் பணிக்கு அனுப்ப முடி­யாது.

இலங்­கையின் கடல்சார் எல்­லை­களைப் பாது­காப்­ப­தற்­கா­கவே இந்தக் கப்­பல்கள் பெற்றுக் கொள்­ளப்­பட்­டன. அந்த விதி ­மு­றையை மீறி பிற நாட்­டுக்கு கப்­பல்­களை அனுப்­பு­வதில் சிக்­கல்கள் எழும்.

இதனால், அமெ­ரிக்கா வழங்­கிய சமுத்ர, கஜ­பாகு, விஜ­ய­பாகு ஆகிய போர்க்­கப்­பல்­களில் ஒன்­றையே செங்­க­ட­லுக்கு அனுப்ப வேண்டும். சமுத்ர 2005ஆம் ஆண்டு வழங்­கப்­பட்ட பழைய போர்க்­கப்பல். நவீன வச­திகள் இல்லை.

இதனால் விஜ­ய­பாகு அல்­லது கஜ­பாகு ஆகிய போர்க்­கப்­பல்­களில் ஒன்­றையே செங்­க­ட­லுக்கு அனுப்ப கடற்­படை தயா­ராக உள்­ளது.

அமெ­ரிக்­காவின் வேண்­டு­கோளின் பேரில் அனுப்­பப்­ப­டு­வதால், இந்தக் கப்­பல்­களை செங்­க­ட­லுக்கு அனுப்­பு­வ­தற்கு தடைகள் இருக்­காது.

ஆனாலும் ஒரு சிக்கல் இருக்­கி­றது. ஹெளதி படை­யி­ன­ரிடம் நவீன ஏவு­க­ணைகள், உள்­ளன. அவற்றை இடைமறித்து தாக்குவதற்கான நவீன ஏவுகணை கட்டமைப்புகள், இலங்கை கடற்படைக் கப்பல்களில் இல்லை.

இதனால், இலங்கை கடற்படைக் கப்பலை செங்கடலில், ஹெளதி படையினரின் ஏவுகணை வீச்சு எல்லைக்குள் நிறுத்த முடியாது.
அதற்கு வெளியே, ஏடன் வளைகுடா பகுதியிலேயே அதனை நிறுத்த முடியும்.

இந்தப் பகுதியில் இந்தியா ஏற்கனவே ஆறு போர்க்கப்பல்களை நிறுத்தியிருக்கிறது.
ஆனாலும் அந்தக் கப்பல்கள் அமெரிக்க கூட்டணியுடன் இணைந்து செயற்படவில்லை.

எனினும் இலங்கை கடற்படை அவ்வாறு தனித்துச் செயற்பட முடியாது. அது பஹ்ரெய்னில் உள்ள அமெரிக்க கூட்டுப் படையணியுடனேயே இணைந்து செயற்பட முடியும்.இது இலங்கை கடற்படைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அமெரிக்க கூட்டணியில் இடம்பெறும் அனைத்து நாடுகளும் தங்களது எதிரி தான் என்றும், அவற்றின் கப்பல்களை தாக்குவோம் என்றும், ஹெளதி படையின் பேச்சாளர் சில நாட்களுக்கு முன்னர் பிபிசிக்கு கூறியிருந்தார்.

அந்த நிலையில் இருந்து பார்த்தால், ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டது போல, இலங்கை கடற்படைக்கு இது ஒரு தற்கொலை நடவடிக்கையாகத் தான் இருக்கப் போகிறது.
சுபத்ரா (Virakesari)

கருத்துகள் இல்லை: