செவ்வாய், 12 டிசம்பர், 2023

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பிரபாகரன் திடீர் கொலை! அமைச்சர் நேருவின் தம்பி

tamil.oneindia.com - Shyamsundar :  அப்படியே உறைந்து போன திருச்சி! ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் திடீர் கொலை.. என்ன நடந்தது?
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் திருச்சியில் கொலை செய்யப்பட்டு உள்ளார். வள்ளுவன் நகரை சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு உள்ளார் .
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் இவரிடம் கடந்த கடந்த சனிக்கிழமைதான் விசாரணை நடத்தினர். நாளை மீண்டும் இந்த விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
Politician Ramajeyam murder case witness Prabu killed by a gang in Trichy
ராமஜெயம் கொலை வழக்கு; திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி திருச்சி-கல்லணை சாலையில் பொன்னிடெல்டா பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் வீசிச்சென்றனர்.

தீவிர விசாரணை: தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழிந்தும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. வழக்கு தொடர்ந்து மெதுவாக நகர்ந்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது. கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

என்ன நடந்தது?: இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் ராமஜெயம் கொலை வழக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 1 வருடமாக விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் பயனுள்ள துப்பு தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதற்கிடையே ராமஜெயத்தை கடத்தி சென்ற கொலையாளிகள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மாடல் காரை பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

குறிப்பிட்ட கார்: அந்த வகையான காரை பயன்படுத்திய நபர்கள் குறித்து தமிழ்நாடு முழுவதும் விசாரித்தனர். இதில் ஈரோடு மாவட்டத்தில் அந்த நிறுவனத்தின் காரை கடந்த 2012-ம் ஆண்டில் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் பயன்படுத்தி இருந்தது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட தகவலில் தெரியவந்தது. இதையடுத்து அந்த கார் உரிமையாளர்கள் ஒவ்வொருவராக சந்தித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களில் 60 சதவீத உரிமையாளர்களிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் மீதம் உள்ள 40 சதவிகிதம் பேரிடம் விசாரணை விரைவில் முடிக்கப்பட உள்ளது

திடீர் கொலை; இப்படிப்பட்ட நிலையில்தான் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் திருச்சியில் கொலை செய்யப்பட்டு உள்ளார். வள்ளுவன் நகரை சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு உள்ளார் .

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் இவரிடம் கடந்த சனிக்கிழமைதான் விசாரணை நடத்தினர். நாளை மீண்டும் இந்த விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

இவர் ஏற்கனவே வேறு சில கொலை வழக்குகள், மோதல் வழக்குகளில் சிறை சென்றவர். பாமக நிர்வாகி ஒருவருடன் இவருக்கு மோதல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இவரின் கொலைக்கு பின் வேறு கும்பல் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

English summary
Politician Ramajeyam murder case witness Prabu killed by a gang in Trichy .
 

கருத்துகள் இல்லை: