திங்கள், 4 டிசம்பர், 2023

தெலுங்கானா மாநில உருவாக்கத்தில் பெரும் பங்களித்த சந்திரசேகர ராவை மக்கள் ஒதுக்கியது ஏன்

 மாலை மலர்  :   தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.
அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்தனர். அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை.

தனிமாநிலமாக உருவாக காரணமாக இருந்தவரை மக்கள் அகற்ற சில காரணங்கள் கூறப்படுகின்றன.

அந்த வகையில், "மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலை அதிகம் கவனம் செலுத்தியது. அதிக அளவில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள். வாரிசுகளின் அதீத ஆதிக்கம். காங்கிரஸ் கட்சி மற்றும் ரேவந்த் ரெட்டியை குறைத்து மதிப்பிட்டது. முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது. அதீத அதிகாரம். இரண்டு முறை தொடர் ஆட்சியில் இருப்பதால் இயல்பான மக்களின் மனநிலை" உள்ளிட்டவைகளை காரணங்களாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: